டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீண்டும் மோடி.. அடித்துக் கூறிய இந்தியா.. 303 இடங்களில் வென்றது பாஜக.. வீழ்ந்தது காங்கிரஸ்!

இந்திய அரசியல் வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Elections Counting 2019: லோக்சபா தேர்தல் திருவிழா..இன்று வாக்கு எண்ணிக்கை!

    டெல்லி: 17வது லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக 303 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதன் மூலம் பாஜக தலைமையிலான ஆட்சி மீண்டும் அரியணை ஏறுகிறது. தமிழகத்தில் 37 இடங்களில் திமுக கூட்டணி வென்றுள்ளது.

    காலம்தான் எத்தனை வேகமாக செல்கிறது.. ஆப் கீ பார் மோடி சர்கார் என்ற வாசகத்துடன் இப்போதுதான் பாஜக அரசு பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது போல இருக்கிறது. ஆனால் அதற்குள் 5 வருட ஆட்சியை மோடி தலைமையிலான பாஜக அரசு வெற்றிகரமாக முடித்துள்ளது.

    பல திட்டங்கள், ஷாக்கிங் அறிவிப்புகள், நிறைய டிவிஸ்டுகளுடன் பாஜக தலைமையிலான ஆட்சி முடிவிற்கு வந்து தேர்தலை சந்தித்தது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதிகளை அறிவித்தது.

    சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன் சென்னையில் 3 தொகுதிகளிலும் மநீம செம.. பல தொகுதிகளில் அபாரம்.. மாற்று சக்தியாக மாறும் கமல்ஹாசன்

    தேர்தல் நடந்தது

    தேர்தல் நடந்தது

    மொத்தம் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 542 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கிய தேர்தல் மே 19ம் தேதி நிறைவு பெற்றது. இந்த வருடம் லோக்சபா தேர்தலில் யாரும் நினைக்காத அளவிற்கு வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டனர். மொத்தம் 8000 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.

    எண்ணிக்கை எப்படி

    எண்ணிக்கை எப்படி

    இந்த தேர்தலில் மொத்தமாக 7 கட்ட தேர்தல் முடிவில், 67.98% வாக்குகள் பதிவானது. நடந்து முடிந்த இந்த 17வது லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கினாலும், முழுதாக முடிவுகளை அறிவிக்க இரவு 11 மணிக்கு மேல் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்! செம ட்விஸ்ட்.. யாருமே இதை கணிக்கவில்லை.. தமிழக அரசியலில் ஒரு அதிரடி திருப்பம்!

    தபால் வாக்குகள்

    தபால் வாக்குகள்

    இந்த தேர்தலில் தொடக்கத்தில் இருந்தே தபால் வாக்குகளில் பாஜகதான் முன்னிலை வகித்தது. தபால் வாக்குகளை எண்ணும் போதே பாஜக 100 இடங்களில் முன்னிலை வகித்தது. அதன்பின் வாக்கு எண்ணிக்கை முழுக்க பாஜகதான் முன்னிலை வகித்தது. மதியம் 12 மணி அளவிலேயே பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று, பின் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்றது.

    தேர்தல் முடிவுகள்

    தேர்தல் முடிவுகள்

    இந்த நிலையில் தேர்தல் முடிவுகளின்படி பாஜக மொத்தம் 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி மொத்தம் 353 இடங்களில் வென்றது. இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது.

    விஸ்வரூபம் எடுத்த விஸ்வரூபம் எடுத்த "மய்யம்" மெளர்யாவும்..வீறு கொண்டு போராடிய காளியம்மாளும்..வட சென்னையில் அனல் போட்டி

    காங்கிரஸ் கூட்டணி

    காங்கிரஸ் கூட்டணி

    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சியாக இருக்க 55 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கூட்டணி 92 இடங்களில் வென்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதியில் தோல்வியை தழுவினாலும், வயநாட்டில் வெற்றிபெற்றார்.

    மற்ற கட்சிகள்

    மற்ற கட்சிகள்

    லோக்சபா தேர்தலில் வென்றதன் மூலம் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உருவெடுத்து இருக்கிறது. திமுக கூட்டணி இந்த தேர்தலில் 37 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக ஒரு இடத்தில் வென்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி தவிர்த்த எதிர்க்கட்சிகள் நாடு முழுக்க 97 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.

    கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்! கேட்கவே கஷ்டமா இருக்கு.. மறக்க முடியாத மன்சூர் அலிகான்.. திண்டுக்கல்லை விட்டு கிளம்பினார்!

    மீண்டும் ஆட்சி

    மீண்டும் ஆட்சி

    இதன் மூலம் பாஜக தலைமையிலான அரசு மீண்டும் மத்தியில் அமைய இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை தவிர்த்து முதல்முறை ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறையாகும். பாஜக விரைவில் ஆட்சி அமைக்க உரிமை கோரி பிரதமர் மற்றும் அமைச்சர்கள் பதவி ஏற்க இருக்கிறார்கள்.

    English summary
    Lok Sabha Elections Counting 2019: The results of the marathon election will be announced today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X