டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நல்லா கேட்டுக்கங்க.. 23ம் தேதி காலை எண்ண ஆரம்பிப்பாங்க.. நைட்டுக்கு மேல்தான் ரிசல்ட் தெரியும்!

தேர்தல் முடிவுகள் தெரிய காலதாமதம் ஆகும் என கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

Recommended Video

    அன்றிலிருந்து இன்று வரை கருத்து கணிப்பு சொல்வது என்ன ?

    டெல்லி: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில், தமிழகத்தின் இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும் என்றும் தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

    கடந்த ஏப்ரல் 18-ந் தேதி, 38 எம்பி தொகுதிகள், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. போன 19-ந் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்து முடிந்தது.

    ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட மிஷின்கள், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு மிஷின்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

    திடீர் திருப்பம்.. பாஜக கூட்டணியில் இணைகிறதா திமுக? ஸ்டாலின் பேட்டியால் வெடித்த சர்ச்சை திடீர் திருப்பம்.. பாஜக கூட்டணியில் இணைகிறதா திமுக? ஸ்டாலின் பேட்டியால் வெடித்த சர்ச்சை

    அறிவிப்பு

    அறிவிப்பு

    நாளை மறுதினம் அதாவது வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது. தமிழகத்தில் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனுக்குடனே வெளியிடப்படும் என சொல்லப்படுகிறது.

    வாக்குப்பதிவு

    வாக்குப்பதிவு

    விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால், முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படும் என சொல்லப்படுகிறது. வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் விவிபிஏடி எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

    ஒப்புகை சீட்டு

    ஒப்புகை சீட்டு

    இதுபற்றி தேர்தல் அதிகாரி ஒருவர் சொல்லும்போது, "சட்டமன்ற இடைத்தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவானவற்றை மாலை 4 மணிக்குள் எண்ணி முடித்துவிடுவார்கள். ஆனால் விவிபிஏடி எந்திரத்தில் ஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம் என்பதால், அவை எண்ணி முடிக்க மாலை 5 மணி ஆகிவிடும். அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.

    விவிபிஏடி

    விவிபிஏடி

    எம்பி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இப்படித்தான் காலதாமதம் ஆகுமாம். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு விவிபிஏடி ஒப்புகை சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும்" என்றார்.

    தபால் ஓட்டுகள்

    தபால் ஓட்டுகள்

    தபால் ஓட்டுகளை துல்லியமாக சரிபார்த்து எண்ணி முடிக்க நேரம் ஆகும் என்று சொல்லப்படுகிறது. அதேபோல, வாக்கு எண்ணிக்கையை ஒப்புகை சீட்டுடன் சரிபார்த்து, சரிபார்த்து எண்ண வேண்டி உள்ளதால், இறுதி சுற்றுகள் தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. அதனால் தேர்தலின் உத்தேச முடிவையே மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். எனவே இறுதி முடிவை தெரிந்து கொள்ள இரவு ஆகலாம் என்றும் சொல்லப்படுகிறது.

    English summary
    It is said that, Parliamentary election results will be known after midnight. Acknowledgments in the VVPAT Machine are checked and the delay in releasing results
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X