டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தென்னிந்தியா இல்லாமல் மோடி வெற்றிபெறுவது கடினம்.. இந்த 5 மாநிலங்கள் மனது வைத்தால்தான்.. களநிலவரம்!

இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெற்றால் கூட பாஜக கட்சியால் தென்னிந்தியாவின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Opinion Polls: பாஜக-வால் தென்னிந்தியாவின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது- வீடியோ

    டெல்லி: இந்த லோக்சபா தேர்தலில் அதிக இடங்களை பெற்றால் கூட பாஜக கட்சியால் தென்னிந்தியாவின் உதவி இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது.

    லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்டது. தேர்தல் நடப்பதற்கு மூன்று நாட்களே இருக்கிறது. இந்த நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக நிறைய கருத்து கணிப்புகள் வெளியாகி வருகிறது.

    இதுவரை வெளியான பெரும்பாலான கருத்து கணிப்புகளில் எந்த கட்சிக்கும் லோக்சபாவில் மெஜாரிட்டி கிடைக்காது என்று கூறப்பட்டு இருக்கிறது. பெரும்பாலும் தொங்கு சபையே உருவாகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இது பாஜகவிற்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    உத்தர பிரதேசம் எப்படி

    உத்தர பிரதேசம் எப்படி

    இதுவரை வந்த கருத்து கணிப்புகளின்படி உத்தர பிரதேசத்தில் மட்டும் பாஜக கூட்டணி முன்பு வாங்கிய இடங்களை விட 40 இடங்கள் குறைவாக பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது. பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி - ஆர்எல்டி கூட்டணி காரணமாக பாஜகவின் வலிமை அங்கு குறைந்து போய் உள்ளது. அங்கு பாஜக 25-35 இடங்கள் மட்டும் பெற வாய்ப்புள்ளது. சென்றமுறை அங்கு பாஜக 70+ இடங்களை வென்றது.

    லோக்சபா தேர்தலில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்.. இது மக்களின் கருத்து கணிப்பு!

    குறையும்

    குறையும்

    அதேபோல்தான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், டெல்லி உள்ளிட்ட இந்தி மாநிலங்களிலும் பாஜக கூட்டணி மோசமான பின்னடைவை சந்திக்க போகிறது என்று கூறுகிறார்கள். இந்த பகுதிகளில் இருந்து பாஜக கூட்டணி 25 இடங்கள் வரை சென்ற முறையை விட குறைவாக பெறும்.

    குழப்புவாங்க.. குழம்பாதீங்க.. ஏமாத்துவாங்க.. ஏமாறாதீங்க.. தினகரன் பலே பேச்சுகுழப்புவாங்க.. குழம்பாதீங்க.. ஏமாத்துவாங்க.. ஏமாறாதீங்க.. தினகரன் பலே பேச்சு

    குடியுரிமை சட்டம்

    குடியுரிமை சட்டம்

    அதேபோல் தேவையில்லாத குடியுரிமை சட்டம் காரணமாக பாஜக வடகிழக்கு மாநிலங்களிலும் மோசமான பின்னடைவை சந்திக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மொத்தமாக வடகிழக்கு மாநிலங்களில் 5-6 இடங்களில் முன்பை விட பாஜக இந்தமுறை குறைவாக பெறும்.

    நாடு முழுக்க

    நாடு முழுக்க

    மொத்தமாக பாஜக கூட்டணி நாடு முழுக்க 80 இடங்களை குறைவாக பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதாவது 190-200 இடங்களை மட்டுமே பாஜக கூட்டணி இந்த தேர்தலில் பெறும். இதனால் பாஜக இதில் பெரும்பான்மை பல பெற முடியாது என்று கருத்துக்கணிப்புகள் கூறுகிறது.

    பாஜக தேசிய அளவில்

    பாஜக தேசிய அளவில்

    இதனால் தற்போது தென்னிந்தியாவின் உதவி இன்றி பாஜக தேசிய அரசியலில் வெற்றிபெற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வடமாநிலங்களில் இழக்கும் 80 இடங்களை பாஜக தென்மாநிலங்களில் பெற்றால் மட்டுமே லோக்சபா தேர்தலில் மெஜாரிட்டி பெற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

    தென்னிந்தியா எப்படி

    தென்னிந்தியா எப்படி

    ஆனால் தென்னிந்தியாவில் பாஜக நினைத்த அளவிற்கு இடங்களை பெற முடியாது என்பதுதான் நிதர்சனம். கர்நாடகாவில் மட்டுமே பாஜக வலுவாக இருக்கும். அங்கு பாஜக 15 இடங்கள் வரை மட்டுமே பெற முடியும். அப்படியே 20 இடங்கள் வரை பெற்றால் கூட மீதம் இருக்கும் மாநிலங்களில் பாஜக அதிக இடங்களை பெறுவது கடினம்.

    தேர்தலுக்கு பின்

    தேர்தலுக்கு பின்

    இதனால் தேர்தலுக்கு பின் பாஜக தென்மாநில கட்சிகளுடன் கூட்டணி வைக்கவே அதிகம் முயற்சி செய்யும் என்றும் கூறுகிறார்கள். முக்கியமாக தெலுங்கனாவில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியுடன் பாஜக கூட்டணி வைக்க முயற்சி செய்யும் என்று கூறுகிறார்கள். அதேபோல் தென்னிந்தியாவில் பாஜக வேறு சில கட்சிகளுடனும் கூட்டணி வைக்க முயற்சி செய்யலாம்.

    English summary
    Lok Sabha Opinion Polls: Modi can't be a PM once again without South India's help - Survey.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X