டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கடும் எதிர்ப்புக்கு இடையே லோக்சபாவில் ஆர்டிஐ திருத்த மசோதா நிறைவேற்றம்.. ஆ ராசா, சசி தரூர் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி; ஆர்டிஐ சட்ட திருத்த மசோதா லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு இடையே நிறைவேறியுள்ளது. இந்த சட்டப்படி மத்திய மற்றும் மாநில தகவல் ஆணையர்களின் ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை இனி மத்திய அரசு தான் முடிவு செய்யும்.

தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை (ஆர்டிஐ மசோதா) மத்திய அரசு லோக்சபாவில் கடந்த 19ம் தேதி மததிய அரசு அறிமுகம் செய்தது.

இந்நிலையில் மத்திய தலைமை தகவல் ஆணையரின் அந்தஸ்தை குறைக்கும், சட்ட திருத்த வரைவு மசோதாவை மத்திய இணை அமைச்சர் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஜிதேந்திரசிங் தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு 178 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 79 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்மூலம் மசோதா லோக்சபாவில் நிறைவேறியுள்ளது.

3 ஆண்டுகள் பதவி காலம்

3 ஆண்டுகள் பதவி காலம்

இந்த மசோதாவின் படி, மத்திய மற்றும் மாநில, மனித தகவல் ஆணையர் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகள் என்பதில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைக்கவும், ஊதியம் உள்ளிட்ட விஷயங்களை முடிவு செய்வது உள்ளிட்ட அதிகாரிகள் மத்திய அரசின் வசம் ஒப்படைக்கப்படுகிறது.

மசோதாவிற்கு எதிர்ப்பு

மசோதாவிற்கு எதிர்ப்பு

இந்த மசோதாவிற்கு லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தேர்தல் ஆணையருக்கு இணையான ஊதியம், அதிகாரம் கொண்ட சுதந்திரமான அமைப்பான தகவல் ஆணையரின் அதிகாரத்தை பறிக்கும் இம்மசோதாவை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று கருப்பு நாள்

இன்று கருப்பு நாள்

லோக்சபாவில் திமுக எம்பி ஆ ராசா பேசுகையில், இன்று ஜனநாயகத்திற்கு இன்றைய நாள் கருப்பு நாள் என்று கூறி இந்தமசோதா நிறைவேற்றத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தகவல் அறியும் உரிமை, அரசியல் அமைப்பின் பிரிவு 19-ன் கீழ் வருகிறது என்றும். தலைமை தேர்தல் ஆணையருடன் தலைமை தகவல் ஆணையரை ஒப்பிட கூடாது என கூறுவது ஏற்புடையதல்ல என்றும் தெரிவித்தார், ஜனநாயகம் என்பது தொடர்ச்சியான செயல் என்றும், அது தேர்தல்களுடன் முடிவடையாது என்றும் தகவல் அறியும் உரிமை சட்டததை நீர்த்து போக செய்வது அடிப்படை உரிமைகளை மக்களிடம் இருந்து பறிக்கும் செய்ல் என்றும ஆ ராசா கடுமையாக விமர்சித்தார்.

வேண்டுமென்றே முயற்சி

வேண்டுமென்றே முயற்சி

காங்கிரஸ் எம்பி சசிதரூர் பேசுகையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தை பலவீனப்படுத்தும் மற்றும் சிஐசி மற்றும் தகவல் ஆணையர்களின் சுதந்திரத்தை சீர்குலைப்பதற்கு வேண்டுமென்ற மத்திய அரசு செய்துள்ள முயற்சி இந்த மசோதா என விமர்சித்தார். தகவல் ஆணையத்தின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் இந்த மசோதா எந்த பொதுவிவாதமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும் விமர்சித்தார்.

English summary
Lok Sabha passed Right to Information (Amendment) Bill, 2019 after strong objection from Opposition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X