டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் மாதம் அறிவிப்பு?... ஆயத்த பணிகளில் தேர்தல் ஆணையம்?

Google Oneindia Tamil News

டெல்லி: நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் வரும் ஜூன் 3-ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தொகுதி பேரம், கூட்டணி பேரம் என பேசி வருகின்றன.

3-ஆவது அணி

3-ஆவது அணி

பாஜக தலைமையில் ஓர் அணியும் காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் -பாஜக இல்லாத 3-ஆவது அணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டு வருகிறார்.

சட்டசபை

சட்டசபை

தொகுதி பங்கீட்டில் சுமூக முடிவு எட்டப்பட்டவுடன் எந்த கட்சி எந்த கூட்டணியில் இருக்கும் என்ற தகவல் தெரியவரும். சிக்கிம் சட்டசபையின் பதவிக்காலம் மே 27-ஆம் தேதியுடனும், அருணாசல பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 1-ஆம் தேதியுடனும், ஒடிசா சட்டசபையின் பதவிக் காலம் ஜூன் 11-ஆம் தேதியுடனும், ஆந்திர சட்டசபையின் பதவிக்காலம் ஜூன் 18-ஆம் தேதியுடனும் முடிவடைகிறது.

5 மாநிலங்களுக்கும்

5 மாநிலங்களுக்கும்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. இதனால் 6 மாத காலத்துக்குள் அந்த சட்டசபைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதனால் நாடாளுமன்றத் தேர்தலுடன் மேற்கண்ட 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தலாம் என தேர்தல் ஆணையம் யோசனையில் உள்ளது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

எத்தனை கட்டங்களாக வாக்குப் பதிவு நடத்துவது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். எனவே நாடாளுமன்ற தேர்தல் தேதியும், 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியும் வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லியில் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

English summary
Loksabha elections will be announced in the March first week? Sources say.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X