டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தேர்தலில் மாஸ் காட்டும் நடிகர், நடிகைகள்… கடும் போட்டி

Google Oneindia Tamil News

டெல்லி: நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்களின் வாரிசுகளுக்கு சீட்டுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக விமர்சிக்கப்படும் சூழலில், திரைத் துறையைச் சேர்ந்த ஏராளமானோர் சுயேட்சையாகவும், கட்சிகள் சார்பிலும் களமிறங்குவது அதிகரித்துள்ளது.

நடிகைகள் கட்சியில் சேருவது அல்லது ஒரு கட்சியை ஆதரிப்பது என்ற நிலையை தாண்டி, தேர்தலில் போட்டியிடுவது கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை தனியாக கட்சி தொடங்கினாலும் யாரும் தேர்தலில் களம் காண வில்லை.

பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ்ராஜ் சுயேட்சையாக களம் காண்கிறார். அவருக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

குமாரசாமியின் மகன்

குமாரசாமியின் மகன்

காங்கிரஸ் கட்சியின் எம்.பியும், மறைந்த நடிகருமான அம்பரீஷின் மனைவியும், நடிகையுமான சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். அதே தொகுதியில், மதசார்பற்ற ஜனதா தளம் வேட்பாளராக முதலமைச்சர் குமாரசாமியின் மகனும், நடிகருமான நிகில் குமாரசாமி களம் காண்கிறார்.

சரிதா நாயர் போட்டி

சரிதா நாயர் போட்டி

நடிகையும், சோலார் பேனல் ஊழல் வழக்கில் தொடர்புடையவருமான சரிதா நாயர் கேரளாவின் எர்ணாகுளம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

பவன் கல்யாண் போட்டி

பவன் கல்யாண் போட்டி

ஆந்திரா சினிமாவின் சூப்பர் ஸ்டாரும், ஜனதா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். நடிகை ரோஜா நகரி சட்டமன்றத் தொகுதியில் ஓ எஸ் ஆர் காங்கிரஸ் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.

நடிகை ஊர்மிளா போட்டி

நடிகை ஊர்மிளா போட்டி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் இணைந்து உள்ள பிரபல நடிகை ஊர்மிளா மும்பை வடக்கு தொகுதியில் வேட்பாளராக களமிறங்குகிறார்.

நடிகை ஜெயபிரதா போட்டி

நடிகை ஜெயபிரதா போட்டி

சமாஜ்வாடி, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பணியாற்றிய நடிகை ஜெயபிரதா உத்தர பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவில் சமீபத்தில் இணைந்த நடிகை இஷா கோபிகருக்கு போக்குவரத்து அணி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

English summary
The Actors Mass showing in the Elections; heavy competition
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X