டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடிக்கு வடக்கே வாய்ஸ் இருக்கலாம்.. தெற்கில் என்ன நிலவரம்?... சர்வே முடிவுகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    மோடிக்கு செல்வாக்கு எங்கே அதிகம்?- சர்வே முடிவுகள்- வீடியோ

    டெல்லி: தென் மாநிலங்களில் பாஜகவிற்கான ஆதரவு தேய்ந்து வருவதாகவும் வடமாநிலங்களில் மோடியின் தனிப்பட்ட பிரியத்தால் மட்டுமே, வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளதாகவும் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.

    540 மக்களவை தொகுதிகளில் 2,25,166 பேரிடம் தொலைப்பேசி மூலம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் அடிப்படையில் அரசியல் பங்குச் சந்தை (PSE) நிறுவனத்துடன் இணைந்து இந்தியா டுடே டிவி கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

    Loksabha elections 2019: PM Modis Personal Popularity highest in Hindi heartland : Survey

    அதன்படி, கர்நாடகாவை தவிர தமிழகம்,கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மோடியின் அலை வீசவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    கிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார் கிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்

    கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின் போது, தமிழ்நாட்டில், 2 தொகுதிகளை தவிர 37 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. ஒரே ஒரு தொகுதியை மட்டும் பிடித்த, பாஜகவுடன், நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணி வைத்துள்ளது.

    தமிழ்நாட்டில் 68 சதவீதம் பேரும், கேரள மாநிலத்தில் 72 சதவீதம் பேரும் மோடியின் செயல்பாடுகளில் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    கர்நாடகாவில் 28 மக்களவை தொகுதிகளிலும், பா.ஜ.க.வின் செல்வாக்கு விரிவடைந்துள்ளது. 55 சதவீத வாக்காளர்கள் தற்போதுள்ள 17 எம்.பி.க்களின் பணிகளில் திருப்தி தெரிவித்துள்ளனர்.

    பாஜகவின் இதயமான மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய முக்கிய மாநிலங்களில், மோடி என்ற தனிப்பட்ட நபரின் ஈர்ப்பை தவிர, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான மனப்பான்மையை வெளிப்படுத்தி உள்ளனர்.

    இதனால், கடுமையான சிக்கலை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போதைய பாஜக எம்.பி-க்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதாகவும் அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    English summary
    Modi's personal popularity highest in Hindi heartland and least in South: Survey
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X