டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர் பருவத்திலேயே அரசியல்.. 3 முறை எம்எல்ஏ, 2 முறை எம்பி.. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா பயோ டேட்டா

Google Oneindia Tamil News

Recommended Video

    லோக்சபாவின் சபாநாயகராக பதவிக்கு வர உள்ளார் ஓம் பிர்லா- வீடியோ

    டெல்லி: கோட்டா தொகுதி எம்பியான ஓம் பிர்லா லோக்சபா சபாநாயகராக இன்று பொறுப்பேற்க உள்ளார். உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்டவர் லோக்சபா சபாநாயகர் ஆகும்.

    சபாநாயகரிடம்தான் லோக்சபாவின் அனைத்து வகை அதிகாரங்களும் குவிந்திருக்கும். எந்த உறுப்பினர் எவ்வளவு நேரம் பேச வேண்டும், எந்த பேச்சு அவைக் குறிப்பில் இருக்க வேண்டும் அல்லது நீக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களையும், சபாநாயகரே தேர்ந்தெடுப்பார்.

    அவையை நடத்த ஏதாவது உறுப்பினர் குந்தகம் செய்தால், அவரை சஸ்பெண்ட் செய்யவோ, அல்லது நீண்ட நாட்களுக்கு நீக்கிவைக்கவும் கூட உரிமையுண்டு. அவைக்குள் நடக்கும் விவகாரங்களின் முழு பொறுப்பாளி சபாநாயகரே ஆவார்.

    சோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை! ட்யூப் லைட் எரிந்த விபரீதம்சோதனையின்போது திடுக்.. ஈரோடு எம்பி கணேசமூர்த்தியை தாக்கிய மின்காந்த அலை! ட்யூப் லைட் எரிந்த விபரீதம்

    புது சபாநாயகர்

    புது சபாநாயகர்

    சபாநாயகர் அனுமதி தராமல், சீருடை அணிந்த காவல்துறையினர், லோக்சபாவிற்குள் காலெடுத்தும் வைக்க முடியாது. லோக்சபா கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று, சபாநாயகர் தேர்வு நடைபெற உள்ளது. ஓம் பிர்லா பெயரை, பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிய உள்ளார். இதையடுத்து, சபாநாயகர் பொறுப்பேற்க தனக்கு சம்மதம் என்று, ஓம் பிர்லா எழுதிக் கொடுப்பார்.

    சுமித்ரா மகாஜன்

    சுமித்ரா மகாஜன்

    கடந்த, 16வது, லோக்சபாவின் சபாநாயகராக பதவி வகித்தவர் சுமித்ரா மகாஜன். இம்முறை அவர் தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, ஓம் பிர்லா அந்த பதவிக்கு வர உள்ளார். ராஜஸ்தானின் கோட்டா-புன்டி லோக்சபா தொகுதியில், காங்கிரசின் ராம்நாராயணன் மீனாவை 2.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தவர் ஓம் பிர்லா.

    எம்எல்ஏ

    எம்எல்ஏ

    1962ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த ஓம் பிர்லா, கோட்டா தெற்கு தொகுதியிலிருந்து 3 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். கடந்த லோக்சபா தேர்தலில் கோட்டா-புன்டி தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக பதவி வகித்தார். இப்போது தொடர்ந்து 2வது முறையாக எம்பியாகியுள்ளார்.

    அரசியல்

    அரசியல்

    வணிகவியலில் முதுகலை பட்டப்படிப்பு முடித்த ஓம் பிர்லா, மாணவர் பருவத்திலேயே தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். 1979ம் ஆண்டு, மாணவர் சங்க தேர்தலில் வென்று தலைவராக பதவி வகித்தார். பாஜகவில் அரசியல் பயணத்தை துவங்கிய ஓம் பிர்லா, அக்கட்சியின், ராஜஸ்தான் மாநில இளைஞர் பிரிவு தலைவராக பதவி வகித்தவர். பிறகு தேசிய அளவில், துணைத் தலைவராக உயர்ந்தார்.

    குடும்பம்

    குடும்பம்

    ஓம் பிர்லாவின் மனைவி பெயர் டாக்டர். அமிதா பிர்லா. 1991ல் திருமணமானது. அகன்க்ஷா மற்றும் அஞ்சலி ஆகிய 2 பெண் குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். அகன்க்ஷா சார்டர்ட் அக்கவுண்டன்ட் பதவியிலும், அஞ்சலி அரசியல் அறிவியல் பிரிவில், பட்டமும் பெற்றவர்கள்.

    English summary
    Kota MP Om Birla Set to be Next Lok Sabha Speaker, to Succeed Sumitra Mahajan,here is his bio data.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X