டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்து கடவுள் அனுமார் ஒரு முஸ்லீமாம்.. காரணம் என்ன சொல்கிறார் தெரியுமா இந்த பாஜக தலைவர்?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்துக்களின் கடவுளான ஹனுமான் ஒரு முஸ்லிம் என்று, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த உத்தரபிரதேச மேலவை உறுப்பினர் புக்கால் நவாப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், இந்து கடவுள் ஹனுமான் ஒரு முஸ்லிமாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமியரின் பெயர்களை போன்றுதான் அனுமார் பெயரும் உள்ளது.

Lord Hanuman was a Muslim, BJP leader Bukkal Nawab theory

ரகுமான், ரம்ஜான், பர்மான், ஜிசான், குர்பான் போன்ற பெயர்கள் இஸ்லாமிய மதத்தில் தான் சூட்டப்படுவது வழக்கம். அனுமான் என்ற பெயரிலிருந்து தான் இந்தப் பெயர்களெல்லாம் சூட்டப்பட்டு இருக்கக்கூடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், அனுமார் தலித், ஜாதி பிரிவை சேர்ந்தவர் என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். வனத்தில் வாழ்ந்து வந்தவர் அனுமார்.. எனவே அவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்றார். ஆதித்யநாத்தின் இந்த கருத்துக்கு, பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, மத்திய அமைச்சர் சத்யபால் சிங், அனுமார், ஒரு ஆரியர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அனுமாரை வைத்து பாஜகவினர் புதிய அரசியலை கிளப்பி வருவதன் ஒரு அங்கமாக இந்த பேச்சுக்கள் பார்க்கப்படுகின்றன.

English summary
The political slugfest over Lord Hanuman's religion got a new twist when state Bharatiya Janata Party's (BJP) Member of Legislative Council (MLC) Bukkal Nawab on Thursday claimed that the deity was a Muslim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X