டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லாஸ்லியாவின் தந்தை மரணம் இயற்கையே!.. பிரேத பரிசோதனை அறிக்கை அளித்த கனடா அரசு

Google Oneindia Tamil News

டெல்லி: பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் இயற்கையானது என்று கனடா அரசு சான்றிதழ் வழங்கியுள்ளது.

கடந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான கவினுடன் ஏற்பட்ட காதலால் சமூகவலைதளங்களில் வைரலானார்.

இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கனடாவில் இருந்து வந்ததால் பெரும் திருப்பங்கள் ஏற்பட்டன.

குதித்து குதித்து கிறங்க வைத்த கேபி.. எதிர்பாராத ட்விஸ்ட் தந்த பிக்பாஸ்.. குழம்பும் ரசிகர்கள்..!குதித்து குதித்து கிறங்க வைத்த கேபி.. எதிர்பாராத ட்விஸ்ட் தந்த பிக்பாஸ்.. குழம்பும் ரசிகர்கள்..!

சேரன்

சேரன்

மகளின் காதலை மரியநேசன் கையாண்ட விதம் கவினின் தவறை நாசுக்காக அவருக்கு புரிய வைத்த விதம் ஆகியவை கமல்ஹாசனால் பாராட்டப்பட்டது. இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரியநேசன் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார். இதனை லாஸ்லியாவும் இயக்குநர் சேரனும் உறுதிப்படுத்தினார்கள்.

தந்தை மரணத்தில் மர்மம்

தந்தை மரணத்தில் மர்மம்

லாஸ்லியாவுக்கு அப்பாதான் உலகம் என்பதால் அவரது இறப்பால் மிகவும் நொந்து போயுள்ளார். அவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் லாஸ்லியாவின் தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின.

தகவல்கள்

தகவல்கள்

ஆனால் லாஸ்லியாவின் தந்தை மரியநேசனின் மரணம் இயற்கையானது என அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்த கனடா மருத்துவர்கள் சான்றளித்துள்ளார்கள். இதை கனடா அரசும் உறுதிப்படுத்தியது. மேலும் அவரது உடல் கனடாவிலிருந்து இலங்கைக்கு இன்னும் ஓரிரு வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உறவினர் மறுப்பு

உறவினர் மறுப்பு

இதனிடையே அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை மரியநேசனின் மைத்துனர் மாயூரான் மறுத்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் எந்த தவறான தகவலையும் பரப்ப வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Losliya's father Mariyanesan's death natural, says Canada Government. His body will be sent to Srilanka by 2 weeks.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X