டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி வெறுப்பை உமிழ்கிறார்.. நான் அன்பை அளிக்கிறேன்.. கடைசியில் அன்புதான் வெல்லும்.. ராகுல் பளீர்!

லோக்சபா தேர்தலில் மோடியின் வெறுப்பை விட தன்னுடைய அன்பே வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: லோக்சபா தேர்தலில் மோடியின் வெறுப்பை விட தன்னுடைய அன்பே வெல்லும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

நாடு முழுக்க லோக்சபா தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. மொத்தம் 59 தொகுதிகளில் தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த லோக்சபா தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

Love will win at the end says Rahul Gandhi on PM Modis campaign

5 கட்டங்களாக இதுவரை 425 தொகுதிகளில் தேர்தல் முடிந்துள்ளது. இன்னும் 118 தொகுதிகளில் தேர்தல் நடக்க வேண்டும். இன்று 169 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது.

இந்த நிலையில் இந்த தேர்தலில் வாக்களிப்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது வீட்டில் இருந்து நடந்தே வந்தார். மத்திய டெல்லியில் உள்ள தனது வீட்டில் இருந்து டெல்லி அப்துல் கலாம் சாலையில் உள்ள அவுரங்கசிப் லேனில் வாக்களிக்க நடந்தே வந்தார்.

என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!என்ன மேக மூட்டம் ரேடாரை மறைக்குமா? வைரலான மோடியின் பேச்சு.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

இவருடன் குறைவான அளவு பாதுகாவலர்கள் வந்தனர். இந்த வாக்களித்த ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில், காங்கிரஸ் பாஜக இடையே நல்ல போட்டி நிலவுகிறது. இந்த தேர்தல் பல முக்கிய விஷயங்களை மையமாக வைத்து இயங்குகிறது. டிமானிடைசேஷன், விவசாயிகள் பிரச்சனை, கப்பார் சிங் வரி (ஜிஎஸ்டி), ரபேல் ஊழல் உள்ளிட்ட விஷயங்களை மையமாக வைத்து தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் மோடி வெறுப்பை வைத்து பிரச்சாரம் செய்தார்.எல்லோர் மீதும் வெறுப்பை உமிழ்ந்தார். ஆனால் நான் அன்பை குறித்து பேசினேன். எனக்கு நம்பிக்கை இருக்கிறது, கடைசியில் அன்புதான் வெல்லும்.

மக்கள்தான் நம்முடைய தலைவர்கள். மக்கள் கொடுக்கும் முடிவை கடைசியில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், என்று ராகுல் காந்தி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

English summary
Lok Sabha Election 2019: Love will win at the end says Rahul Gandhi on PM Modi's campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X