Just In
வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டர்கள் விலை ரூ. 6.52 குறைப்பு!
டெல்லி: வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டர்களின் விலை ரூ. 6.52 குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மானியமில்லாத சிலிண்டர்களின் விலை ரூ. 133 குறைக்கப்பட்டுள்ளது. மாதப் பிறப்பையொட்டி இந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விலையின்படி, 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டரின் விலை ரூ. 500.90 (இது டெல்லி விலை) ஆக இருக்கும். மானியமில்லாத சிலிண்டரின் விலை ரூ. 133 குறைக்கப்பட்டு 809.50 ஆக இருக்கும்.

நவம்பர் 1ம் தேதிதான் வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டர்களின் விலை ரூ. 2.94 உயர்த்தப்பட்டிருந்தது. கடந்த ஜூன் மாதத்திலிருந்தே சிலிண்டர் விலை உயர்ந்தபடிதான் இருந்தது. தற்போதுதான் முதல் முறையாக குறைப்புக்கு வந்துள்ளது. தற்போதைய விலை குறைப்பானது மாநிலத்திற்கு மாநிலம் சிறிய அளவில் வேறுபடும்.