டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோட்ஸே பற்றிய பிரக்யா தாக்கூரின் சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடாளுமன்ற அவை குறிப்பிலிருந்து நீக்கம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    சொந்த கட்சி எம்.பி மீது அதிரடி காட்டிய பாஜக

    டெல்லி: கோட்ஸே குறித்தும் காந்தியின் கொலை குறித்தும் பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

    கோட்ஸே குறித்த பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் கூறிய கருத்து பெரிய சர்ச்சையாகி உள்ளது. முக சார்பாக பேசிய எம்பி ஆ. ராசா, தலைவர்கள் பாதுகாப்பு தொடர்பான எஸ்பிஜி மசோதா பற்றி பேசும் போது நாம் கோட்ஸேவை நினைவு கூற வேண்டும். அவர் காந்தியை கொன்றதாக தானே ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்று குறிப்பிட்டார்.

    LS speaker Birla removes Sadhvi Pragyas Deshbhakt speech on Godse

    இதை கேட்டதும் சாத்வி கடும் கோபம் அடைந்தார். உடனே அவர் குறுக்கிட்டு, கோட்ஸே ஒரு தேச பக்திமான். நீங்கள் ஒரு தேச பக்திமானை பற்றி இங்கு எடுத்துக்காட்டு கொடுத்து பேச கூடாது. அது மிகவும் தவறு என்று குறிப்பிட்டார்.

    இவருடைய கருத்துக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. பிரக்யா தாக்கூருக்கு எதிராக இவரால் அவையிலேயே கருத்து கூறி, கோஷம் எழுப்ப தொடங்கினார்கள். இதனால் அவையில் பெரிய குழப்பம் ஏற்பட்டது.

    வதந்திகளை பரப்ப வேண்டாம்.. அவரின் மைக் வேலை செய்யவில்லை.. பிரக்யா கருத்துக்கு பாஜக விளக்கம்!வதந்திகளை பரப்ப வேண்டாம்.. அவரின் மைக் வேலை செய்யவில்லை.. பிரக்யா கருத்துக்கு பாஜக விளக்கம்!

    சில பாஜக எம்பிக்களும் பிரக்யா தாக்கூருக்கு எதிராக குரல் கொடுத்து, அவரை அமர சொன்னார்கள். இதனால் அவர் எதுவும் கருத்து கூறலாம் அமர்ந்தார். தன்னுடைய பேச்சு குறித்து நாளை விளக்கம் அளிப்பேன் என்று செய்தியாளர்களிடம் பிரக்யா தாக்கூர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இவரின் பேச்சு பெரிய சர்ச்சையாகி உள்ளது.

    இந்த நிலையில் பிரக்யா தாக்கூர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறி அவரின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து பிரக்யா தாக்கூர் பேச்சை சபாநாயகர் ஓம் பிர்லா நீக்கி உள்ளார்.

    English summary
    Lok Sabha speaker Birla removes Sadhvi Pragya's Deshbhakt speech on Godse.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X