டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கையில் மை வைக்க ஐடியா கொடுத்தவர்.. ஹிஸ்டரி படித்தவருக்கு ஆர்பிஐ கவர்னர் பதவியா? வெரி குட்!

ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஆர்.பி.ஐ. புதிய கவர்னராக சக்திகாந்த தாஸ் நியமனம்... யார் இவர்?- வீடியோ

    டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டு இருப்பது பெரும் விமர்சனத்தை சந்தித்து இருக்கிறது.

    மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் நிலவி வந்தது. இதையடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.

    இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

    ம.பி., ராஜஸ்தான் முதல்வர் பதவி ரேஸில் 4 பேர்.. ராகுல் காந்தியுடன் அடுத்தடுத்து இன்று சந்திப்பு ம.பி., ராஜஸ்தான் முதல்வர் பதவி ரேஸில் 4 பேர்.. ராகுல் காந்தியுடன் அடுத்தடுத்து இன்று சந்திப்பு

    மூளை

    மூளை

    சக்திகாந்த தாஸ் மத்திய அரசின் முன்னாள் நிதி செயலாளராக இருந்துள்ளார். இவர் நிதி செயலாளராக இருந்த சமயத்தில்தான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த நடவடிக்கைக்கு மூளையாக செயல்பட்ட சிலரில் இவரும் ஒருவர்.

    பேட்டி அளித்தவர்

    பேட்டி அளித்தவர்

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட பின் அதை பேட்டிகளில் விளக்கியது இவர்தான். அரசு வெளியிட்ட அறிக்கைகளை இவர்தான் செய்தியாளர் சந்திப்பில் விளக்கினார். அதேபோல் மக்கள் என்ன செய்ய வேண்டும் , எங்கு பணம் எடுக்க வேண்டும் என்று இவர்தான் விதிகளையும் வகுத்து கூறினார்.

    சில முத்துக்கள்

    சில முத்துக்கள்

    பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட சமயத்தில் இவர் உதிர்த்த சில முத்துக்கள் பெரிய வைரல் ஆனது.

    1. ஏடிஎம்மில் நிற்கும் மக்கள் கூட்டம் ஏழை மக்கள் கூட்டம் அல்ல. நிறைய ஏடிஎம் கார்ட் வைத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் பணம் எடுக்க வரும் நபர்களின் கூட்டம் அது. ஏழை மக்கள் இதனால் கஷ்டப்படவில்லை.

    2. வங்கிகளில் பணம் எடுக்கும் நபர்கள் மீண்டும் பணம் எடுக்காமல் இருக்க மக்கள் கையில் மை வைக்க வேண்டும்.

    3. பணமதிப்பிழப்பு நடவடிக்கை கருப்பு பணத்தை வெளியே கொண்டு வரும்.

    4. பணமதிப்பிழப்பு நடவடிக்கை டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்கும், ஆகிய அதிக விமர்சனங்களை ஏற்படுத்திய பேட்டிகளை இவர்தான் அளித்தது.

    என்ன படிப்பு

    என்ன படிப்பு

    அதேபோல் இவரது படிப்பும் பெரிய சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இவர் வரலாறு துறையில் பிஏ மற்றும் எம்ஏ படித்து இருக்கிறார். அதன்பின் ஐஏஎஸ் ஆன பின் பல்வேறு துறைகளில் வேலை பார்த்துவிட்டு பின் நிதி செயலாளராக பணியாற்றி இருக்கிறார். இவர் எதன் அடிப்படையில் ஆர்பிஐ கவர்னராக நியமிக்கப்பட்டார் என்று யாருக்கும் தெரியாது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அதேபோல் முன்னாள் ஆர்பிஐ கவர்னர்கள் ரகுராம் ராஜன், உர்ஜித் பட்டேல் வரை பலர் பொருளாதாரம் பிரிவில் பிஎச்டி பெற்றவர்கள். ஆனால் இவர் அப்படி பொருளாதாரம் பிரிவில் எந்த பட்டமும் பெறாதவர். அதேபோல் இவரை விட தற்போது ஆர்பிஐயில் தகுதி வாய்ந்த நபர்கள் பலர் இருக்கின்றனர். ஆனால் இவருக்கு ஏன் இந்த பதவி என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    MA History, Brain of Demonetisation, New RBI governor Shaktikanta Das appoinment erupts many confusions.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X