டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உத்தரகாண்ட்டை தொடர்ந்து ம.பி.யிலும் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி ? எதிர்க்கட்சிகள் போர்க்கொடி

Google Oneindia Tamil News

போபால்: உத்தரகாண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட இருக்கிறது. மத்திய பிரதேச அரசின் இம்முடிவுக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாட்டில் கஞ்சா சாகுபடிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடையை மீறி மலைப் பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகள் பயிரிடப்படுவதும் அவற்றை போலீசார் அழிப்பதும் தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகின்றன.

Madhya Pradesh also to Legalize Cannabis in the State

இந்நிலையில் 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் கஞ்சா பயிர் சாகுபடிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நாட்டில் முதன் முதலாக சட்டப்பூர்வமாக கஞ்சா பயிரிட உத்தரகான்ட் மாநிலம்தான் அனுமதி அளித்தது.

சந்தர்ப்பவாத என்சிபி-காங்.- சிவசேனா கூட்டணி அரசு 6 மாதம் கூட நீடிக்காது: நிதின் கட்காரிசந்தர்ப்பவாத என்சிபி-காங்.- சிவசேனா கூட்டணி அரசு 6 மாதம் கூட நீடிக்காது: நிதின் கட்காரி

இருப்பினும் கஞ்சாவானது மருத்துவ பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டிருந்தது. இதனைப் பின்பற்றி கஞ்சா சாகுபடிக்கு அனுமதிப்பது குறித்து இமாச்சல பிரதேச மாநில அரசும் ஆலோசனை நடத்தியது.

தற்போது மத்திய பிரதேச அரசும் கஞ்சா சாகுபடிக்கு அனுமதி அளிக்க உள்ளதாக அம்மாநில அமைச்சர் பி.சி. சர்மா தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியான பயன்பாட்டுக்காக இல்லாமல் மருத்துவ, தொழில்துறை பயன்பாட்டுக்காக கஞ்சா சாகுபடி செய்ய அனுமதிக்கப்படும் என்றார்.

இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கஞ்சா சாகுபடிக்கு அனுமதிப்பது மாநிலத்தில் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என பாஜக எச்சரித்துள்ளது.

English summary
After Uttarakhand state Now Madhya Pradesh is Planning to Legalize Cannabis in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X