டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ம.பி. அரசியல் புயல்... அமித்ஷா.. ஜேபி நட்டாவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசியல் நெருக்கடிக்கு காரணமாக ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் சேர உள்ளதாக ஊகங்கள் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாஜக மத்திய மாநிலங்களுக்கான தேர்தல் கமிட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடந்தது.

காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியா கட்சியை விட்டு விலகியதையடுத்து மத்திய பிரதேசத்தில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ஆதரவளிக்கும் மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பெரிய அளவில் இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

மத்திய பிரதேச முதல்வராக கமல்நாத் நியமிக்கப்படதில் இருந்தே அதிருப்தியில் இருந்த சிந்தியா தன்னை முதல்வராக்க வேண்டும் என்று விரும்பும் எம்எல்ஏக்கள் 17 பேருடன் நேற்று பெங்களூரு சென்றார். இந்நிலையில் சிந்தியாவுக்கு ஆதரவாக 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயர் என்பி பிரஜபதியிடம ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர்-

சோனியாவுக்கு கடிதம்

சோனியாவுக்கு கடிதம்

இதற்கிடையே பெங்களூருவில் இருந்து டெல்லி வந்த சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சரும், பாஜக முன்னாள் தலைவருமான அமித் ஷாவை டெல்லியில் புதன்கிழமை சந்தித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து தனது பதவியை ராஜினாமா செய்தார். சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரிலும் வெளியிட்டார்.

ஆட்சி கவிழும் நிலை

ஆட்சி கவிழும் நிலை

ஜோதிராதித்யா சிந்தியாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்கள் கமல்நாத் அரசாங்கத்தின் ஆதரவை வாபஸ் பெற்றால், அது மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் ஆட்சியை ஆபத்தில் உள்ளது. எப்போது வேண்டும் என்றாலும் ஆட்சி கவிழும் நிலை உள்ளது.. மத்திய பிரதேசத்தில் ஒவ்வொரு ஒரே நாளில் பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன.

மார்ச் 12 வரை

மார்ச் 12 வரை

இந்நிலையில் மத்திய பிரதேச ஆளுநர் லால்ஜி தண்டோன் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக கூறினார். தற்போது அவர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருக்கிறார். அவர் மார்ச் 12ம் தேதிக்கு முன்பு போபாலில் இருந்து திரும்ப மாட்டார் என்கிறார்கள் அவரது அரசியல் ஆலோசகர் மத்திய பிரதேச நிலையை கவனித்து அவருக்கு தகவல் அளித்து வருகிறாராம்.

அமித்ஷா பங்கேற்பு

அமித்ஷா பங்கேற்பு

இந்நிலையில் ஜோதிராதித்யா சிந்தியா பாஜகவில் சேர உள்ளதாக ஊகங்கள் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் பாஜக மத்திய மாநிலங்களுக்கான தேர்தல் கமிட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று இரவு நடந்தது. இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, தவார் சிங் கெலாட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் மத்திய பிரதேசத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
In the wake of speculation over Jyotiraditya Scindia joining the BJP, a meeting of the BJP's Central Election Committee is being chaired by Prime Minister Narendra Modi in Delhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X