டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மத்திய பிரதேசத்தில் மந்தம்.. மிசோராமில் விறுவிறு.. நிறைவடைந்த 2 மாநில தேர்தல் வாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    மத்திய பிரதேசம், மிசோராமில் இன்று வாக்கு பதிவு- வீடியோ

    டெல்லி: மத்திய பிரதேசம் மற்றும் மிசோராம் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல்கள் இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. இரு மாநிலங்களிலும், வாக்காளர்கள் ஆர்வத்தோடு வந்து வாக்களித்தனர்.

    மிசோராம் மாநிலத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. அங்கு, மாலை 4 மணி நிலவரப்படி 71 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

    Madhya Pradesh, Mizoram election polling started

    மத்திய பிரதேசத்தில், நக்சல்கள் பாதிப்பு கொண்ட லாஞ்சி, பரஸ்வாடா மற்றும் பைகார் சட்டசபை தொகுதிகளுககு 7 மணிக்கே வாக்குப் பதிவு துவங்கி 3 மணிக்கு நிறைவடைந்தது. எஞ்சிய 227 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கி 5 மணிக்கு நிறைவுற்றது. ம.பி.யில் சுமார் 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Madhya Pradesh, Mizoram election polling started

    மத்திய பிரதேசத்தில் 5.04 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அங்கு மொத்தம், 2,899 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். கடந்த தேர்தலில் பாஜக 165 தொகுதிகளை வென்றிருந்தது. காங்கிரஸ் 58 தொகுதிகளையும் வென்றது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் 759 வேட்பாளர்கள் கிரிமினல் பின்புலம் கொண்டவர்கள். 656 பேர் கோடீஸ்வரர்கள்.

    இன்று காலையிலேயே, வாக்குப்பதிவை முன்னிட்டு, முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நர்மதா நதியில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். தனது வாக்கை பதிவு செய்த பிறகு நிருபர்களிடம் பேசுகையில், பாஜக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் என்றார்.

    வட கிழக்கு மாநிலமான மிசோராமில் 7.70 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காங்கிரஸ் கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த மாநிலம் மிசோராம். கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 34 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடித்த காங்கிரஸிடமிருந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக கடும் போட்டியை கொடுத்தது.

    English summary
    Polling in Madhya Pradesh and Mizoram is underway to pick their respective new assemblies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X