டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமித் ஷாவின் சாணக்கியத்தனமா இது..? நோ, நோ.. காங்கிரசின் தோல்வி.. மகா தோல்வி!!

Google Oneindia Tamil News

டெல்லி: ஆஹா.. எப்படி ஒரு இளம் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா.. அவரை அநியாயமாக கொண்டு பாஜகவில் தாரைவார்த்து விட்டார்களே இந்த காங்கிரஸ் தலைவர்கள் என்ற முணுமுணுப்பு அந்தக் கட்சிக்குள் விண்ணை முட்டும் அளவுக்கு எழுகிறது.

Recommended Video

    ம.பியில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங். அமைச்சரவை கலைப்பு

    ஆம்.. தாரைதான் வார்த்து விட்டனர். தலைவர்களை மட்டுமல்ல மொத்த காட்சியையும் என்றுதான் சொல்ல வேண்டும்!

    மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று முதல்வராக அசைக்க முடியாத செல்வாக்குடன் வீற்றிருந்தார் பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான். அப்பேர்ப்பட்ட மலையை, ஒரு பயமறியா இளம் கன்று நகர்த்தி, நாற்காலியிலிருந்து அகற்றிப் போட்டது.

    மீண்டும் 17 எம்.எல்.ஏக்கள் கேம்... கர்நாடகா பாணியில் ம.பி.யில் ஆட்சியை அபகரிக்கிறது பாஜக?மீண்டும் 17 எம்.எல்.ஏக்கள் கேம்... கர்நாடகா பாணியில் ம.பி.யில் ஆட்சியை அபகரிக்கிறது பாஜக?

    உழைப்பாளி

    உழைப்பாளி

    அந்த வீரமிக்க, திறமைமிக்க இளம் கன்று பெயர்தான் ஜோதிராதித்ய சிந்தியா. பரம்பரை பரம்பரையாக காங்கிரஸ் ரத்தம் ஓடக்கூடிய குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். இவர் தந்தை மாதவராவ் சிந்தியா, ஜனசங்கத்தில் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பிறகு காங்கிரசில் இணைந்தார். ஆனால், ஒரு கட்டத்தில், பாஜகவுக்கு தாவியவர்தான். அதையும் மறுக்க முடியாது. ஆனால், ஜோதிராதித்ய சிந்தியா, காங்கிரசுக்காக உண்மையாக உழைத்தவர்.

    ராகுல் காந்தி அக்கறை

    ராகுல் காந்தி அக்கறை

    ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவராக இருந்த போது இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவேண்டும் என்று முன்னிறுத்தப்பட்டவர்களில் ஒருவர், ஜோதிராதித்ய சிந்தியா. ரத்தம், வியர்வை என அனைத்தையும் சிந்தி, ம.பி.யில் வெற்றிக்கொடி நாட்டிய இவருக்கு பரிசாக கிடைத்தது ஏமாற்றம் தான். கடைசி நேரத்தில் கமல்நாத்தை முதல்வர் ஆக்கி அழகு பார்த்தது காங்கிரஸ் தலைமை. ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வராக்க ராகுல் காந்தி எவ்வளவோ முயன்றும், சோனியா காந்தி இதற்கு ஒப்புக் கொள்ளாததால் , கடும் இழுபறிக்கு பிறகு, தனித்து விடப்பட்டார் ஜோதிராதித்ய சிந்தியா.

    நியாயமே இல்லை

    நியாயமே இல்லை

    விவசாயம் செய்தது ஒருவர், விளைச்சலை அனுபவிப்பவர் இன்னொருவர் என்ற நிலைமையை காங்கிரஸ் கட்சியின் தலைமைதான் உருவாக்கியது. இதன் பலனை லோக்சபா தேர்தல் முடிவுகளிலும் அது கண்டது. அப்படியும் விழித்துக் கொள்ளவில்லை, நாட்டின் பழம் பெரும் கட்சி. ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு தேசிய அளவில் ஒரு நல்ல பதவியை கொடுத்து, அவரை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்வதில் தவறியது தலைமை. பத்தோடு பதினொன்னு.. அத்தோடு இதுவும் ஒன்று.. என்ற ரீதியில் ஜோதிராதித்ய சிந்தியா கழற்றி விடப்பட்டார். அவரும் மனிதர்தானே.. அந்த கோபத்தில் தான் அதிருப்தியாளர்களுடன் மனிதர் எஸ்கேப் ஆகினார்.

    பாஜகவில் இணைகிறார் சிந்தியா

    பாஜகவில் இணைகிறார் சிந்தியா

    இதோ இன்று ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். அவர் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் கூறுகின்றன. இது நடந்துவிட்டால் இதைவிட மகா கேவலம் காங்கிரஸ் கட்சிக்கு இருக்க முடியாது. ஒரு கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, இன்னமும் தலைமைப் பதவிக்கு நிரந்தரமாக ஒருவரை நியமிக்க முடியாமல், உடல் நலக்குறைவு இருந்தாலும் சோனியாகாந்தி இடைக்கால தலைவராக செயல்பட்டு வரும் கட்சியில், இதைத்தான் எதிர்பார்க்க முடியும்.. அது வேற விஷயம்.

    எதிர்காலமே இல்லை

    எதிர்காலமே இல்லை

    இப்படி ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்க கூடிய ஒரு தலைமை மீது எந்த இளம் தலைவர்களுக்கு நம்பிக்கை வரும்? அதிலும், இளம் தலைவருக்கே இந்த கதி என்றால், அந்த கட்சியின் எதிர்காலம் இருளாக அல்லவா காட்சியளிக்கிறது. இதனால்தான், ஒவ்வொருவராக கலைந்து செல்ல ஆரம்பித்துவிட்டனர். கர்நாடகாவிலும் இப்படித்தான் நடந்தது. அங்கு காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்த நிலையில் பல காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அமைச்சர்கள் கூட அடங்குவர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால், இடைத்தேர்தலில் மக்கள் பெரும்பாலும், கட்சி மாறியவர்களைத்தான் மீண்டும் தேர்ந்தெடுத்தனர். இவ்வளவுதான் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு.

    காங்கிரசின் பெரும் தோல்வி

    காங்கிரசின் பெரும் தோல்வி

    மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கலைத்துவிட்டு பாஜக ஆட்சியை பிடிப்பதில், சாணக்கிய முறையுடன் அமித் ஷா செயல்பட்டுள்ளார் என்றுதான் கண்டிப்பாக ஊடகங்கள் பேசும். ஆனால் உண்மை நிலை அதுவல்ல. காங்கிரஸ் கோட்டைவிட்ட இடத்தில்தான் அமித்ஷா கொடி நாட்டுகிறார். எதிர்க்கட்சிகள் பலமாக உள்ள பிராந்தியங்களில் கிடையாது. அரசியல் நன்கு அறிந்தவர்களுக்கு புரிந்த விஷயம் இது. ஒரு நாட்டில் எதிர்க்கட்சி என்பது வலுவாக இருக்க வேண்டியது அவசியம். ஆனால் இன்றல்ல, நாளையாவது காங்கிரஸ் முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்த அந்த தொண்டர்களுக்கு இளம் தலைவர்களை, இப்படி பிற கட்சிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் காங்கிரஸ் தலைமையின் மெத்தனம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்.. இது அமித்ஷாவின் வெற்றி இல்லை.. காங்கிரஸின் தோல்வி.. படுதோல்வி!!

    English summary
    Madhya pradesh political crisis is not a BJP victory, this is absolutely defeat of the Congress
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X