டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: மதுரை அழகர்கோவில் தமிழக வனத்துறைக்குச் சொந்தமானது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வெளியிட்டுள்ளது.

மதுரையிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது அழகர் கோவில். இது மிகவும் பிரசித்திபெற்றது. அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரைக்கு வருவதுதான் சித்திரை திருவிழா ஆகும்.

Madurai Azhagarkoil belongs to forest department, says SC

இதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் எல்லாம் நடக்கும். இதை காண லட்சக்கணக்கானோர் வைகை ஆற்றில் கூடுவது வழக்கம். இந்த நிலையில் அழகர்கோவில் அறநிலையத்துறைக்கு சொந்தமானது என கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வனத்துறை மேல் முறையீடு செய்தது. இந்த நிலையில் இந்த வழக்கை நீதிபதி ராமேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரணை செய்து வந்தது. வாதங்கள் அனைத்தும் முடிவுற்றது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ!கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சைபர் தாக்குதல்.. உச்சகட்ட உஷார் நிலையில் இஸ்ரோ!

இந்த நிலையில் அழகர்கோவிலும் அதை சுற்றியுள்ள மலைப் பகுதிகளும் வனத்துறைக்கே சொந்தமானது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. இது மிகவும் முக்கியமான தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

English summary
SC quashes Chennai HC Madurai branch's judgement that Madurai Azhagarkoil belongs to Hindu Endowment and says that it belongs to Forest department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X