டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அசத்தும் ஆம் ஆத்மி.. டெல்லியில் தொடங்கியது பிரம்மாண்ட பொதுக்கூட்டம்.. ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்!

டெல்லியில் இன்று திமுக உள்ளிட்ட பாஜகவிற்கு எதிரான கட்சிகள் சேர்ந்து பெரிய பொதுகூட்டத்தை நடத்த இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்டக் கூட்டம்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி சார்பாக நடத்தப்படும் எதிர்க்கட்சிகள் மாநாடு தற்போது தொடங்கி இருக்கிறது. இதில் திமுக சார்பாக எம்.பி கனிமொழி கலந்து கொண்டு இருக்கிறார்.

    கடந்த மாதம் கொல்கத்தாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகள் கலந்து கொண்டது.

    எதிர்க்கட்சிகள் ஒன்றாக சேர்ந்து வரலாற்றில் நடத்திய மிகப்பெரிய மாநாடு இதுதான் என்று கூறுகிறார்கள். இந்த நிலையில் டெல்லியில் அதேபோலதொரு மாநாடு தற்போது தொடங்கி உள்ளது.

    அப்போதே சொன்னார்

    அப்போதே சொன்னார்

    கடந்த மாநாட்டின் போது, பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ''இங்கு இப்போது மமதா பானர்ஜி தலைமையில் கூட்டம் நடக்கிறது. எல்லோரும் இங்கு வந்து இருக்கிறார்கள். சில நாட்களில் டெல்லியில் இப்படி கூட்டம் நடக்கும். அப்போதும் எல்லோரும் வர வேண்டும். டெல்லியில் ஆம் ஆத்மி இந்த கூட்டத்தை நடத்தும்'' என்று கூறி இருந்தார்.

    பெரிய ஏற்பாடு

    பெரிய ஏற்பாடு

    தற்போது அதேபோல் ஆம் ஆத்மி சார்பாக மிகப்பெரிய கூட்டம் நடந்து வருகிறது. தலைநகரில் எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய கூட்டம் நடத்துவது இதுவே முதல்முறை. அதனால்தான் என்னவோ இந்த கூட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மொத்தம் 20 கட்சியை சேர்ந்த முக்கிய நபர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

    யார் எல்லாம்

    திமுக சார்பாக எம்.பி, திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மமதா பானர்ஜி, ஆந்திர பிரதேச முதல்வர் தெலுங்கு தேசம் தலைவர் என் சந்திரபாபு நாயுடு, மஜத தேசிய தலைவர் எச்டி தேவ கவுடா, தேசிய கான்பிரன்ஸ் தலைவர் பரூக் அப்துல்லா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜ் வாதி சார்பாக ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ், ராஷ்டிரிய ஜனதா தளம், ராஷ்டிரிய லோக் தளம் ஆகிய கட்சிகள் இதில் கலந்து கொண்டு இருக்கிறது.

    காங்கிரஸ் யார்

    காங்கிரஸ் யார்

    இந்த நிகழ்விற்கு இன்னும் சில அரசியல் தலைவர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் சார்பாக இந்த விழாவில் யார் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விழாவில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.

    English summary
    Mahagathbandhan Meet In Delhi: AAP Arvind Kejriwal will host the Rally this time, Congress may miss the show.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X