டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

LIVE BREAKING NEWS: தொடங்கியது எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஆலோசனை.. டெல்லியில் புது புயல்!

இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் சந்தித்து 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் சந்தித்து 2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறது.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த கூட்டணியை அமைக்க உள்ளது. இது குறித்து ஆலோசிக்க இன்று டெல்லியில் கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் முக்கியமான எதிர்க்கட்சிகள் பல கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, திமுக, ஆம் ஆத்மீ, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்ற மாநில கட்சிகள் இதில் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.

Mahagathbandhan Meet of oppositions to held today in Delhi - LIVE UPDATES

Newest First Oldest First
3:52 PM, 10 Dec

தெலுங்கு தேசம் கட்சியின் அழைப்பை அடுத்து கூட்டம் நடக்கிறது

காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்

சமாஜ்வாதி, மஜத, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கிறது

3:43 PM, 10 Dec

டெல்லியில் எதிர்க்கட்சி கூட்டம் தொடங்கியது
3:28 PM, 10 Dec

மேற்கு வங்க முதல்வர் மமதாவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடக்க உள்ள நிலையில் சந்திப்பு

1:45 PM, 10 Dec

எதிர்க்கட்சிகள் ஆலோசனை: மக்கள் பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கவும் திட்டம்

ரஃபேல் ஊழல், ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, விலையேற்றம் பற்றி ஆலோசிக்க திட்டம்

12:40 PM, 10 Dec

டெல்லி வந்தார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி

எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள டெல்லிக்கு வருகை

11:51 AM, 10 Dec

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருடன் திமுக தலைவர் ஸ்டாலின் சந்திப்பு

16-ம் தேதி நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவின் அழைப்பிதழை வழங்கினார்

சந்திப்பில் கனிமொழியும் உடன் இருந்தார்

ஸ்டாலின் இன்று இன்னும் சில தலைவர்களை சந்திக்க இருக்கிறார்

8:06 AM, 10 Dec

இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள் மாபெரும் ஆலோசனை கூட்டம்

2019 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை

பாஜகவிற்கு எதிராக ஓரணியில் திரள எதிர்க்கட்சிகள் ஆலோசனை

காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆலோசனையில் கலந்து கொள்கிறது

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார்

English summary
Mahagathbandhan Meet: The high-level meeting of oppositions to held today in Delhi. DMK leader Stalin will participate in the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X