டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கருப்பு, சிவப்பு, நீலம், மஞ்சள், பச்சை மற்றும் பல.. காவிக்கு எதிராக சங்கமிக்கும் வண்ணங்கள்!

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்ய போவது பாஜகவிற்கு பெரிய அளவில் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கருப்பு, சிவப்பு, நீலம், மற்றும் பல... காவிக்கு எதிராக களமிறங்கு கட்சிகள்- வீடியோ

    டெல்லி: டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆலோசனை செய்ய போவது பாஜகவிற்கு பெரிய அளவில் கிலியை ஏற்படுத்தி இருக்கிறது.

    பாஜகவிற்கு இது சோதனை காலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று நினைத்துக் கொண்டு இருந்த பாஜகவிற்கு, ''உங்க பொடனிக்கு பின்னாடிதான் இருக்கோம் பாஸ்'' என்று கூறி பயமுறுத்தி இருக்கிறது எதிர்க்கட்சிகள்.

    டெல்லியில் எல்லா எதிர்க்கட்சிகளும் பிளவுகளை மறந்து ஒன்றாக சேர்வது என்பது இந்திய வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்று. பாஜக இதை எப்படி சமாளிக்க போகிறது, இந்த கூட்டணியை எப்படி எதிர்கொள்ள போகிறது என்பது பெரிய கேள்வியாக உள்ளது.

    5 மாநில எக்சிட் போல் கணிப்பில் பாஜகவிற்கு பின்னடைவு.. பங்குச் சந்தை வீழ்ச்சி 5 மாநில எக்சிட் போல் கணிப்பில் பாஜகவிற்கு பின்னடைவு.. பங்குச் சந்தை வீழ்ச்சி

    வண்ணம்

    வண்ணம்

    இது காவிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடுக்க போகும் வண்ண போர் என்றுதான் கூற வேண்டும். திமுகவின் கருப்பு சிவப்பு, காங்கிரசின் மூவர்ணம், மஜதவின் பச்சை, சமாஜ்வாதியின் சிவப்பு பச்சை, இடதுசாரிகளின் சிவப்பு, பகுஜன் சமாஜின் நீலம் என்று எல்லா வண்ணமும் தற்போது ''காலா'' பட கிளைமேக்ஸ் போல டெல்லியில் பாஜகவின் காவிக்கு எதிராக கரம்கோர்க்க உள்ளது.

    பாஜகவிற்கு அச்சம்

    பாஜகவிற்கு அச்சம்

    இது பாஜகவிற்கு பெரிய கிலியை கொடுத்து இருக்கிறது. முதலில் பாஜக நினைத்தது என்னவோ, காங்கிரஸ் தனியாக நிற்கும், மற்ற கட்சிகள் மூன்றாவது அணியை உருவாக்கும் என்பதுதான். இதனால் வாக்குகள் பிரியும் என்று கூட கனவு கண்டது. ஆனால் மூன்றாவது அணி உருவாகாமல், ஒரே அணியாக எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்தது பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

    இதற்கு முன் வரலாறு

    இதற்கு முன் வரலாறு

    இதற்கு முன் நடந்த கூட்டணி அரசியல் வரலாறு அதே பாஜகவிற்கு உவர்பானதாக இல்லை. உத்தர பிரதேச இடைத்தேர்தல் தொடங்கி இதுவரை நடந்து லோக் சபா இடைத்தேர்தலில் எல்லாம் எங்கு எதிர்க்கட்சிகள், மாநில கட்சிகள் கூட்டணி வைத்து இருக்கிறதோ அங்கு எல்லாம் பாஜக பெரிய தோல்வியை தழுவி இருக்கிறது. இதனால்தான் பாஜக இந்த மாபெரும் 2019 கூட்டணியை நினைத்து அச்சம் கொள்கிறது.

    கண்டிப்பாக எதிரொலிக்கும்

    கண்டிப்பாக எதிரொலிக்கும்

    இந்த கூட்டணி அரசியல் கண்டிப்பாக நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் இந்த கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் அறிவிக்கப்பட வாய்ப்பு இல்லை. இதனால், பாஜகவால் தனியாக ஒருநபரை குறி வைத்து தாக்க முடியாது. அது பிரச்சாரத்தின் போது பாஜகவிற்கு பெரிய பின்னடைவை கொடுக்கும். தேர்தல் முடிவிலும் எதிரொலிக்கும். 2019 தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், இன்று நடக்கும் சந்திப்பு மிக முக்கியமானதாக மாறியுள்ளது.

    English summary
    Mahagathbandhan Meet: RAINBOW politics of New alliance may work well against Saffronisation of India by BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X