டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இப்போது அல்ல.. 2 மாதத்திற்கு முன்பே 'பிளான் பி' போட்ட அமித் ஷா.. அஜித்தை சிக்க வைத்தது இப்படித்தான்

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை 2 மாதத்திற்கு முன்பே கணித்து, அப்போதே பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டங்களை போட்டு இருந்தார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்களை 2 மாதத்திற்கு முன்பே கணித்து, அப்போதே பாஜக தேசிய தலைவர் அமித் ஷா திட்டங்களை போட்டு இருந்தார் என்று கட்சி வட்டாரத்தில் தெரிவிக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சனிக்கிழமை அதிகாலை பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைத்தார். அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறுவார்கள். அதற்கு கடந்த சனிக்கிழமை மிக சிறந்த உதாரணம்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் பாஜகவுடன் கூட்டணி வைத்தார். பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க நவம்பர் 30 வரை நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிரான அவசர வழக்கு நாளைய தீர்ப்பிற்காக காத்து இருக்கிறது.

அவை காவலர்கள் அத்துமீறல்.. காங் எம்பி ஜோதிமணி உள்பட 2 பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார் அவை காவலர்கள் அத்துமீறல்.. காங் எம்பி ஜோதிமணி உள்பட 2 பெண் எம்பிக்கள் சபாநாயகரிடம் புகார்

அரசியல் மாற்றம்

அரசியல் மாற்றம்

மகாராஷ்டிராவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் அதிர்ச்சி அளிக்க கூடிய வகையில் இருந்தாலும், இதற்கு எல்லாம் அமித் ஷாவின் அதிரடி திட்டங்கள்தான் காரணம். காஷ்மீர் பிரச்சனை தொடங்கி மாநில தேர்தல்கள் வரை எதிலும் அமித் ஷா தோல்வியே சந்தித்தது கிடையாது. இதில் அவர் அப்படிதான் திட்டம் போட்டு செயல்பட்டார் என்கிறார்கள்.

மும்பை

மும்பை

அதிலும் மகாராஷ்டிராவில் தற்போது நாம் பார்த்து வரும் அரசியல் மாற்றங்களை அவர் 2 மாதத்திற்கு முன்பே கணித்துவிட்டார் என்கிறார்கள். பாஜகவின் காஷ்மீர் அரசியல் தொடங்கி அயோத்தி நிலைப்பாடு வரை சிவசேனா அனைத்தையும் கடுமையாக எதிர்த்து வந்தது. இரண்டும் இந்துத்துவா கட்சிகள்தான்.

பாஜக

பாஜக

ஆனாலும் சிவசேனா - பாஜக இடையில் அவ்வப்போது சண்டை வந்து கொண்டுதான் இருந்தது. இதனால் பாஜக தலைவர் அமித் ஷா அப்போதே பிளான் பியை போட்டுவிட்டார். சிவசேனா கடைசி நேரத்தில் பிரச்சனை செய்யலாம். எப்போது வேண்டுமானாலும் சிவசேனா தன்னுடைய வேலையை காட்டும். அதனால் இப்போதே தேசியவாத காங்கிரஸ் உடன் சேர வேண்டும்.

என்சிபி எப்படி

என்சிபி எப்படி

ஆனால் சரத் பவாரை வைத்து கொண்டு என்சிபி உடன் சேர முடியாது. அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதனால் அஜித் பவார்தான் சரியான ஆள் என்று அவரை அமித் ஷா ஏற்கனவே தொடர்பு கொண்டு இருக்கிறார். 2 மாதத்திற்கு முன்பே பாஜக அவருடன் இணக்கமாக சென்றுவிட்டது என்று கூறுகிறார்கள்.

அஜித் பவார்

அஜித் பவார்

அதிலும் அஜித் பவார் மீதான அமலாக்கத்துறை வழக்குதான் அவரின் மனமாற்றத்திற்கு காரணம் என்று சிலர் கூறினார்கள். ஆனால் அமலாக்கத்துறை வழக்கு பெரிய பிரச்சனை இல்லை. அவர்கள் குடும்பத்தில் உள்ள ஈகோ பிரச்சனைதான் இதற்கு காரணம். மகாராஷ்டிரா அரசியலில் இந்த ஈகோ பிரச்சனை வெளிப்படையாக தெரிந்ததுதான்.

சண்டை

சண்டை

அவர்களின் குடும்பத்தில் பெரிய அளவில் பங்காளி சண்டை இருக்கிறது. அதை சரியாக பயன்படுத்தினால் கட்சியையே காலி செய்துவிடலாம். சரத் பவாருக்கு அரசியல் தெரிந்து இருக்கலாம். ஆனால் அவருக்கு தன்னுடைய குடும்பத்தை பற்றி தெரியவில்லை என்று கூறுகிறார்கள்.

ஆனால் அமித் ஷா

ஆனால் அமித் ஷா

அதனால் அதை அமித் ஷா பயன்படுத்திக் கொண்டார். அஜித் பவாரை பிரம்மாஸ்திரம் போல பயன்படுத்தாமல் வைத்து இருந்தார். சிவசேனா மொத்தமாக எதிரியாக மாறிய போது அஜித்தை அமித் ஷா களமிறக்கிவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அமித் ஷாவின் அடுத்த மூவ் என்ன? அவர் எப்படி பெரும்பான்மையை நிரூபிப்பார் என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Maharashtra: BJP national Chief Amit Shah designed his plan B with Ajit Pawar a couple of months ago.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X