டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மாநிலத்திலும் காத்திருக்கும் முக்கிய சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா.. என்ன முடிவு எடுப்பார்?

மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று இருந்தாலும், அவர்களால் கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Election results 2019 | மகாராஷ்டிரா, ஹரியானாவில் சிக்கல்.. தீவிர யோசனையில் அமித் ஷா

    டெல்லி: மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வென்று இருந்தாலும், அவர்களால் வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

    மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது. இன்னும் சில மணி நேரங்களில் மொத்தமாக முன்னணி நிலவரங்கள் தெரிந்துவிடும். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் போலவே பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலை உருவாகி உள்ளது. ஹரியானாவில் தொங்கு சட்டசபை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பாஜக கூட்டணி

    பாஜக கூட்டணி

    தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 179 தொகுதிகளில் அதிரடியாக முன்னிலை வகிக்கிறது. இந்த கூட்டணியில் 62 இடங்களில் சிவசேனா முன்னிலை வைக்கிறது. பாஜக 117 இடங்களில் தற்போது வரை முன்னிலை வைக்கிறது.

    எவ்வளவு முன்னிலை

    எவ்வளவு முன்னிலை

    இன்னொரு பக்கம் காங்கிரஸ் கூட்டணி 84 தொகுதியில் முன்னிலை வகிக்கிறது. 41 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. தேசியவாத காங்கிரஸ் 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற 145 இடங்களில் வெல்ல வேண்டும்.

    ஆட்சி அமைக்க முடியாது

    ஆட்சி அமைக்க முடியாது

    இதனால் பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் சிவசேனாவின் தயவு தேவை. ஆகவே அங்கு சிவசேனா தற்போது கிங் மேக்கராக மாறியுள்ளது. அங்கு சிவசேனா சொல்லும் நபரே முதல்வராகும் நிலை ஏற்படலாம். சமயங்களில் சிவசேனா முதல்வர் பதவியை கேட்க கூட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அதேபோல் ஹரியானாவில் பாஜகவிற்கு இன்னொரு அதிர்ச்சி காத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஹரியானா சட்டசபை தேர்தலில் 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 36 தொகுதிகளில் முன்னிலை. பெரும்பான்மை பெற 46 இடங்கள் தேவை. அங்கு நெக் டு நெக் போட்டி நிலவி வருகிறது.

    கிங் மேக்கர் எப்படி

    கிங் மேக்கர் எப்படி

    அங்கு தற்போது 12 இடங்களில் ஜேஜேபி எனப்படும் ஜன்னயாக் ஜனதா பார்ட்டி முன்னிலை வகிக்கிறது. இந்த கட்சி யாருக்கு ஆதரவு அளிக்கிறதோ அவர்களே அங்கு ஆட்சி அமைக்க முடியும் என்று நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹரியானாவிலும் பாஜக வெற்றியை கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இரண்டு மாநில தேர்தல் தொடர்பாக அமித் ஷா என்ன முடிவு எடுக்க போகிறார் என்று பாஜக தொண்டர்கள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    English summary
    Maharashtra, Haryana election results: What will BJP do, If they don't get a majority as a single party?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X