டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் கொரோனா பாதிப்புகளில் 86% இந்த 6 மாநிலங்களில்தான் உள்ளதாம்... ஷாக் கொடுக்கும் மத்திய அரசு!

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் புதிதாக பதிவாகும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப்,கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் 86% பங்களிப்பு செய்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் மட்டும் வாரந்தோறும் 16,012 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சதவீதம் அடிப்படையில் பஞ்சாப்பில் என்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

பயனுள்ள சோதனை, விரிவான கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி 24 மணிநேரமும் போட்டுக்கொள்ளலாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்கொரோனா தடுப்பூசி 24 மணிநேரமும் போட்டுக்கொள்ளலாம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன்

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

மீண்டும் தலைதூக்கும் கொரோனா

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அக்டோபர் வரை கொரோனா பேயாட்டம் போட்டது. அதன் பிறகு கொஞ்சம் ஓய்வு எடுத்தது. ஆனால் தற்போது கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் அச்சுறுத்தும் பாதிப்புகள் இல்லை. ஆனால் கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது.

கேரளா, மகாராஷ்டிராவில் அதிகம்

கேரளா, மகாராஷ்டிராவில் அதிகம்

குறிப்பாக கேரளா, மகாராஷ்டிராவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் 15,000-க்குள் இருந்த பாதிப்புகள் மீண்டும் 15,000-க்கு மேல் பதிவாகி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று அதிகமுள்ள மாநிலங்கள் தடுப்பூசியை மக்களுக்கு விரைந்து செலுத்துமாறும், நோய் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகப்படுத்துமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

6 மாநிலங்களில் 86% பாதிப்புகள்

6 மாநிலங்களில் 86% பாதிப்புகள்

இந்த நிலையில் நாட்டில் புதிதாக பதிவாகும் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் 86% பங்களிப்பு செய்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை மட்டும் நாடு முழுவதும் குறைந்தது 14,989 பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மகாராஷ்டிராவில் 7,863 பாதிப்புகளும் , கேரளாவில் 2,938 பாதிப்புகளும், பஞ்சாபில் 729 பாதிப்புகளும் பதிவாகியுள்ளன.

விரைந்த அதிகாரிகள் குழுவினர்

விரைந்த அதிகாரிகள் குழுவினர்

மகாராஷ்டிராவில் மட்டும் வாரந்தோறும் 16,012 பாதிப்புகள் அதிகரித்துள்ளன. பாதிப்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை சதவீதம் அடிப்படையில் பஞ்சாப்பில் என்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. சுகாதார அமைச்சக கூட்டுச் செயலாளர் நிலை அதிகாரிகள் தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவினர் மகாராஷ்டிரா, கேரளா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், கர்நாடகா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், மற்றும் ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவுறுத்தல்

பயனுள்ள சோதனை, விரிவான கண்காணிப்பு, நேர்மறையான பாதிப்பு உள்ளவர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல் மற்றும் பாதிப்பு உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை விரைவாக தனிமைப்படுத்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

English summary
According to the Union Ministry of Health, Maharashtra, Kerala, Punjab, Karnataka, Tamil Nadu and Gujarat account for 86% of the newly reported corona infections in the country
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X