டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா ஆளுநர் செய்த 4 தவறுகள்... பட்டியல் போடும் காங்கிரஸ் சுர்ஜிவாலா

Google Oneindia Tamil News

Recommended Video

    மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்

    டெல்லி: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியுள்ள ஆளுநர் கோஷ்யாரி 4 முக்கியமான தவறுகளை செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா பட்டியலிட்டுள்ளார்.

    இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் சுர்ஜிவாலா எழுதியுள்ளதாவது:

    எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் 4 முக்கிய நடவடிக்கைகளை ஆளுநர் கோஷ்யாரி மேற்கொண்டிருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை.

    Maharashtra Prez reule:Congress lists 4 grave violations

    1. தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அடிப்படையில் தனிப்பெரும் கட்சியை அதாவது பாஜக-சிவசேனாவை இணைந்து ஆட்சி அமைக்க அழைத்திருக்க வேண்டும்.

    2. 2-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸை இணைந்து அழைத்திருக்க வேண்டும்.

    3. தனிப்பட்ட கட்சிகளைத்தான் அழைக்க வேண்டும் என முடிவெடுத்தால் ஏன் காங்கிரஸை ஆளுநர் அழைக்கவில்லை?

    4. பாஜகவுக்கு 48 மணிநேரம் கெடு; சிவசேனாவுக்கு 24 மணிநேரம்; என்சிபிக்கு 24 மணிநேரம் கூட கொடுக்கப்படவில்லை. ஏன் இந்த பாகுபாடு?

    ஆளுநரின் நடவடிக்கையானது அரசியல் சாசனத்துக்கு எதிரானது . இவ்வாறு சுர்ஜிவாலா சாடியுள்ளார்.

    ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் அமல்- பெரும்பான்மையை நிரூபித்தால் வாபஸ்- உள்துறை அமைச்சகம்

    English summary
    Congress party today listed 4 major violations by Maharastra Governor, before imposed the President rule in the state.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X