டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

$127 மில்லியன் வசூல்! 8 ஆஸ்கர்.. ஆனால் காந்தியின் ஆவி என பயந்த மக்கள்! இந்த சுவாரசிய கதை தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் தேச தந்தையாக உள்ள மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு இருக்கையில், காந்தி குறித்த நினைவுகள் பலவற்றை சிலர் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் காந்தி குறித்து 1982ல் வெளியான திரைப்படம் குறித்து அதன் இயக்குநர் சில தகவல்களை கடந்த 2012ல் பகிர்ந்துள்ளார்.

இந்த நினைவு பகிரல் காந்தி ஜெயந்தியான இன்று மறு பகிர்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில் காந்தியாக நடித்த நடிகரை பார்த்து சிலர் இது மகாத்மா காந்தியின் ஆவி என பயந்ததாக இயக்குநர் கூறியுள்ளார்.

காந்தி ஜெயந்தி : 'வன்முறை தவிர்த்து அமைதியைப் போற்றுவோம்’ - தலைவர்கள் வாழ்த்து! காந்தி ஜெயந்தி : 'வன்முறை தவிர்த்து அமைதியைப் போற்றுவோம்’ - தலைவர்கள் வாழ்த்து!

 காந்தி

காந்தி

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி வீரராக இருந்தவர் மகாத்மா காந்தி. ஏறத்தாழ 30 ஆண்டுகளாக இந்த சுதந்திர போராட்டத்தை அகிம்சை வழியில் வழிநடத்தியவர் இவர். இவ்வாறு இருக்கையில் காந்தியின் மறைவுக்கு பிறகு அவர் குறித்து திரைப்படம் எடுக்க பலர் முயற்சித்தனர். அவ்வாறு சில திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கத்தில் பென் கிங்ஸ்லி நடிப்பில் 1982ல் வெளியான காந்தி குறித்த திரைப்படம்தான் இப்போதுவரை ஒரு சிறந்த படமாக பார்க்கப்படுகிறது.

திரைப்படம்

திரைப்படம்

ஏனெனில் இந்த திரைப்படத்தில் நடத்த பென் கிங்ஸ்லி அசல் காந்தியை போலவே இருந்ததாக நேரில் பார்த்த பலரும் கூறியுள்ளனர். இது குறித்த நினைவுகளை 2012ல் தனியார் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளிக்கும்போது இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ பகிர்ந்துகொண்டார். "இந்தப் படத்தில் ரோகினி ஹட்டங்கடி, ரோஷன் சேத், அலிக் பதம்ஸி மற்றும் சயீத் ஜாஃப்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இது விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் பெரும் வெற்றிக் கண்டது.

காந்தியின் ஆவி

காந்தியின் ஆவி

உலகம் முழுவதும் சுமார் 127 மில்லியன் டாலர் அளவுக்கு வசூலையும், 8 ஆஸ்கர் விருதுகளையும் வென்றது. இவ்வாறு இருக்கையில் படப்பிடிப்பு தளத்தில் பொதுமக்கள் பலர் வேடிக்கை பார்ப்பதற்காக கூடுவது வழக்கம். அந்த வகையில், பென் கிங்ஸ்லியை பார்த்து சிலர் உண்மையான காந்தி என்று நினைத்துக்கொண்டிருந்தனர். சிலர் காந்தியின் ஆவிதான் பென் கிங்ஸ்லி என பயந்தனர். இது போன்ற வித்தியாசமான சம்பவங்கள் பல அரங்கேறின.

கடும் உழைப்பு

கடும் உழைப்பு

நான் முதன் முறையாக பென் கிங்ஸ்லியை பார்த்ததிலிருந்து அடுத்த 5 ஆண்டுகள் வரை வேறு யாரையும் நான் அது போல கண்டதில்லை. பென் கிங்ஸ்லி அந்த அளவுக்கு என்னை ஈர்த்திருந்தார். அவரது உடல்வாகு உண்மையான காந்தியை போன்றே இருந்தது. இந்த திரைப்படத்தில் முழு உழைப்பையும் செலுத்த வேண்டும் என காந்தி குறித்த தகவல்களை தேடி தேடி படித்தார் பென் கிங்ஸ்லி. காந்தியை போலவே பென் கிங்ஸ்லியும் நூல் நூற்பதற்கு கற்றுக்கொண்டார். இவையெல்லாம்தான் இந்த படத்தின் வெற்றிக்காக உதவியது." என்று இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ கூறியுள்ளார்.

English summary
Gandhi Jayanti is celebrated across the country on the birthday of Mahatma Gandhi, the father of India. While this is the case, some are sharing many memories of Gandhi. In 2012, its director shared some information about the 1982 film about Gandhi. This commemorative share is being re-shared today on Gandhi Jayanti. The director said that after seeing the actor who played Gandhi in the film, some people feared that he was the spirit of Mahatma Gandhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X