டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கூலிங் கிளாஸ், டி சர்ட், கோட்டுடன் பீர் பாட்டில் லேபிளில் காந்தியின் படம்.. கொந்தளித்த இந்தியர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Mahatma Gandhi: காந்தியின் படத்தை பயன் படுத்திய இஸ்ரேல் பீர் நிறுவனம்- வீடியோ

    டெல்லி: இஸ்ரேல் நாட்டு மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்றதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

    தேசப்பிதா காந்தியடிகள் அகிம்சையை கடைபிடித்து வந்தார். மேலும் அவர் மதுவுக்கு எதிரானவர். இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் 71-ஆவது சுதந்திர தினத்தையொட்டி அந்நாட்டை சேர்ந்த மக்கா பிரீவரி நிறுவனம் புதிய பீர் பாட்டிலை தயாரித்துள்ளது.

    அந்த மதுபான பாட்டிலில் மகாத்மா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தியுள்ளது.

    Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்Video: ஒரே செகண்ட்தான்.. கண் மூடி திறப்பதற்குள் எல்லாம் முடிஞ்சு போச்சு.. அதிர வைத்த ஆக்சிடென்ட்

    இந்தியர்

    இந்தியர்

    அதிலும் மகாத்மா காந்தியின் படத்துக்கு கருப்பு கூலிங் கிளாஸ் அணிவித்து, கார்டூன் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இதை கண்டு வேதனை அடைந்த இஸ்ரேல் நாட்டில் பணிபுரியும் இந்தியர் ஒருவர் புகைப்படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளார்.

    கோரிக்கை

    கோரிக்கை

    இது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதனால் இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக இந்தியர்கள் கொதித்துள்ளனர். இதுகுறித்து மாநிலங்களவையில் நேற்று விவாதிக்கப்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட நிறுவனம் அந்த படத்தை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

    பெஞ்சமின்

    பெஞ்சமின்

    கேரளத்தை சேர்ந்த மகாத்மா காந்தி தேசிய அமைப்பைச் சேர்ந்த எபி ஜோஸ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    உத்தரவு

    உத்தரவு

    அந்த கடிதத்தில் மதுபான பாட்டிலில் காந்தியின் படம் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அகிம்சை போதித்து உலகளவில் கொண்டாடப்படும் காந்திஜியை இது போல் சித்தரித்துள்ளது காந்தியவாதிகளுக்கு வேதனை அளிக்கிறது. இது தொடர்பாக அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு உடனடியாக காந்தி உருவம் பொதித்த லேபிள்களை நீக்க உத்தரவிட வேண்டும்.

    முழக்கம்

    முழக்கம்

    மதுவை விற்பதற்கு எதிராகவும் அதை பருகுவதற்கு எதிராகவும் காந்தியடிகள் கடுமையான போராட்டத்தை மேற்கொண்டார். ஒரு கட்டத்தில் தான் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள மதுபானம் தயாரிக்கும் அனைத்து ஆலைகளையும் மூடுவேன் என முழக்கமிட்டவர் என ஜோஸ் தெரிவித்தார்.

    English summary
    Mahatma Gandhi's image on Israel based company's liquor bottle. Indians demand to remove that label immediately.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X