டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போற போக்கை பார்த்தா மோடியுடன் வீடியோ கான்பரன்ஸில் பேசவே இல்லைன்னு சொல்லுவாரோ மகிந்த ராஜபக்சே?

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் பேசியது குறித்து எனக்கு எதுவுமே ஞாபகமே இல்லை என இலங்கையின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியும் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் இருநாடுகளிடையேயான உறவுகள் குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனையின் போது ஈழத் தமிழருக்கு சமநீதி வழங்கும் இலங்கை அரசியல் சாசனத்தின் 13-வது அரசியல் சாசனத் திருத்தத்தை அமல்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தி இருந்தார்.

Mahinda Rajapaksa coments on Meeting With PM Modi

இது தொடர்பாக இலங்கையில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த மோடி வலியுறுத்தவில்லை என்றார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனிடையே கொழும்பில் பத்திரிகையாளர்களை மகிந்த ராஜபக்சே சந்தித்தார். அப்போது மோடியுடன் பேசியது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, மோடியுடன் என்ன பேசினேன் என்பது குறித்து ஞாபகமே இல்லை என அடித்து சொல்லி இருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்

இதேபோல் பல கேள்விகளுக்கு ஆகட்டும் பார்க்கலாம் என்கிற ரேஞ்சில் பதில் தந்திருக்கிறார் மகிந்த. இதேபோக்கு நீடித்தால் மோடியையே நான் சந்தித்து பேசவில்லை எனவும் ராஜபக்சே கூறிவிடுவார் போல என செய்தியாளர்கள் கிண்டலடித்துவிட்டு நகர்ந்தனர்.

English summary
Srilanka PM Mahinda Rajapaksa coments on Meeting With Prime Minisiter Narendra Modi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X