டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாலை நேரம்..திடீரென ஐஇடி வெடிபொருட்களுடன் காஷ்மீருக்குள் நுழைந்த டிரோன்.. சுட்டு வீழ்த்திய போலீஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீர் எல்லையில் சுமார் 5 கிலோ ஐஇடி வெடிபொருட்களை எடுத்து வந்த டிரோனை காஷ்மீர் போலீசார் சுட்டு வீழ்த்தியு
ள்ளனர்.

Recommended Video

    Uttarakhand Border-ல் அதிகரிக்கும் Drone நடமாட்டம்.. China-க்கு பதிலடிக்கு கொடுக்கும் India

    ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள விமானப்படைத் தளத்தில் கடந்த மாதம் திடீர் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் இரண்டு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர்.

    டிரோன்கள் மூலம் வெடிபொருட்களைப் பயங்கரவாதிகள் அனுப்பியுள்ளனர் என்றும் அது தான் குண்டுவெடிப்பை ஏற்படுத்தியுள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

    ராஜ்யசபா:அமைச்சர் கையில் இருந்து அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்.பி சாந்தனுசென் சஸ்பெண்ட் ராஜ்யசபா:அமைச்சர் கையில் இருந்து அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்.பி சாந்தனுசென் சஸ்பெண்ட்

    டிரோன்கள்

    டிரோன்கள்

    பாகிஸ்தான் எல்லையில் இயங்கும் பயங்கரவாதிகள் இதுபோல டிரோன்கள் அனுப்புவதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விமானப்படையில் குண்டுவெடிப்பு நடந்த மறுநாளே மேலும் சில டிரோன்கள இந்தியா எல்லையில் நுழைந்தது. பாதுகாப்புப் படையில் ஈடுபட்டிருந்தவர்கள், அந்த டிரோன்களை நோக்கிச் சுடத் தொடங்கியதும், அது மீண்டும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளுக்குச் சென்றுவிட்டன.

    ஐஇடி வெடிமருந்து

    ஐஇடி வெடிமருந்து

    இந்நிலையில், இன்று அதிகாலை காஷ்மீரின் கனச்சக் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் டிரோன் ஒன்று நுழைந்துள்ளது. இதையடுத்து காஷ்மீர் போலீசார் இந்த டிரோனை உடனடியாக சுட்டு வீழ்த்தியுள்ளனர். அந்த டிரோனை ஆய்வு செய்த காஷ்மீர் போலீசார் அதில் சுமார் 5-6 கிலோ ஐஇடி வெடி மருந்தின் மூலப்பொருட்களைக் கைப்பற்றினர். இந்திய எல்லைக்குள் சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்த டிரோன் வீழ்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப் பெரிய பயங்கரவாத சதித்திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    விமானப்படை

    விமானப்படை

    இதேபோல முன்னதாக கடந்த புதன்கிழமை காஷ்மீரின் சத்வாரி என்ற பகுதியில் சந்தேகத்திற்குரிய டிரோன் நடமாட்டத்தை போலீசார் கண்டறிந்தனர். அதேபோல கடந்த ஜூலை 16ஆம் தேதி, ஜம்மு விமான தளத்திற்கு அருகிலும் டிரோன் நடமாட்டம் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. எல்லையில் கடந்த சில காலங்களாகவே டிரோன் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், நாட்டிலுள்ள முக்கிய விமானப்படைத் தளங்களில் anti-drone சிஸ்டத்தை நிறுவ இந்திய விமானப்படை முடிவு செய்துள்ளது.

    உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை

    உள் துறை அமைச்சகம் எச்சரிக்கை

    முன்னதாக வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குத் தேதிக்குள் தலைநகர் டெல்லியில் டிரோன் தாக்குதலை நடத்தப் பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் டெல்லி போலீசார் தங்கள் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாகக் கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Jammu and Kashmir police have shot down a drone carrying improvised explosive device (IED) material weighing 5 kg. The drone was flying about 7 to 8 km inside the border.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X