டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மெஜாரிட்டி முக்கியமல்ல".. எடப்பாடிக்கு இடியாக போன செய்தி! அஸ்திவாரமே ஆடும்! கோர்ட்டில் என்ன நடந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதிகள் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளனர்.

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இதில் எடப்பாடி தரப்பின் விளக்கத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது. அதே சமயம், வழக்கு முடியும் வரை பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை நடத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் எடப்பாடியிடம் உறுதி வாங்கி உள்ளது.

உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே

 எடப்பாடி

எடப்பாடி

இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு வைத்த வாதத்தில், அதிமுக சட்ட விதிப்படி பொதுக்குழு கூடவில்லை. அதிமுக சட்ட விதிப்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும். ஆனால் அப்படி நடக்கவில்லை. விதியை மீறி பொதுக்குழுவை கூட்டி உள்ளனர். தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. ஆனால் இதை உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என்று வாதம் வைத்தது.

நீதிபதிகள்

நீதிபதிகள்

இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் நீதிபதிகள் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன் அளித்த விளக்கத்தில்,எடப்பாடி பழனிசாமி தரப்பு தங்களுக்கே மெஜாரிட்டி இருப்பதாக வாதம் வைத்தது. ஆனால் நாங்கள் மெஜாரிட்டி பற்றி ஆராய போவதில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. மெஜாரிட்டி யாருக்கு இருக்கிறது என்பது எங்கள் கவலை இல்லை. பொதுக்குழு எப்படி கூடியது என்பதே எங்கள் கவலை.

மெஜாரிட்டி

மெஜாரிட்டி

பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். அதாவது மெஜாரிட்டி பற்றி கவலைப்பட போவது இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடியாக வந்து இருக்கும் செய்தி. ஏனென்றால் அதிமுக சட்டப்படி பொதுக்குழுவை ஒருங்கிணைப்பளார், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட முடியும். இவர்களின் பதவிக்காலம் காலாவதி ஆகிவிட்டது என்று எடப்பாடி வாதம் வைக்க முடியாது.

 பதவிக்காலம்

பதவிக்காலம்

ஏனென்றால் அவர்களின் பதவிக்காலம் காலாவதி ஆனால், பொதுக்குழு உறுப்பினர் பதவிகளும் காலாவதி ஆகும். எனவே மெஜாரிட்டி அடிப்படையில் பொதுக்குழுவை கூட்டினோம் என்றுதான் எடப்பாடி தரப்பு வாதம் வைத்து வந்தது. அதாவது 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி இதுவரை வாதம் வைத்து வந்தார். கடந்த முறை உயர் நீதிமன்றத்தில் இரட்டை நீதிபதி அமர்வில் இதே வாதத்தைதான் எடப்பாடி வைத்தார்.

காலாவதி

காலாவதி

இந்த வாதம்தான் எடப்பாடி தரப்பிற்கு அஸ்திவாரமாக இருந்தது. ஆனால் இந்த முறை உச்ச நீதிமன்றமோ.. மெஜாரிட்டி என்பது விஷயமே இல்லை என்று கூறியுள்ளது. அதை பற்றி கூற மாட்டோம். பொதுக்குழு சட்டப்படி கூட்டப்பட்டதா என்பதை வழக்கில் ஆராய போகிறோம் என்று நீதிபதிகள் கூறி உள்ளனர். இதுதான் எடப்பாடிக்கு சிக்கலாக வந்து இருக்கும் வாதம். நீதிபதிகள் மெஜாரிட்டி பற்றி பேச மாட்டோம் என்று கூறியுள்ளதால், வேறு வலுவான வாதங்களை வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டு உள்ளது.

English summary
Majority is not a matter? What did Supreme Court say to Edappadi Palanisamy in AIADMK Case?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X