டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு பக்கம் டிரம்ப் வருகை.. இன்னொரு பக்கம் மகாதீர் ராஜினாமா.. ஒரே நாளில் மோடிக்கு 2 குட் நியூஸ்!

ஒரு பக்கம் டிரம்ப் வருகை.. இன்னொரு பக்கம் மகாதீர் ராஜினாமா.. ஒரே நாளில் மோடிக்கு 2 குட் நியூஸ்!

Google Oneindia Tamil News

டெல்லி: மலேசிய பிரதமர் பதவியில் இருந்து மகாதீர் மொஹ்மது ராஜினாமா செய்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மலேசியா உறவில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    இந்தியா மலேசியா இடையே கடந்த சில நாட்களாக பல்வேறு விஷயங்களால் பிரச்சனை நிகழ்ந்து வந்தது. காஷ்மீர் பிரச்சனை, சிஏஏ பிரச்சனை தொடங்கி சிறு சிறு பொருளாதார தடை வரை இரண்டு நாடுகளுக்கும் இடையில் உருவெடுத்தது.

    ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து ஐநாவில் விவாதிக்கப்பட்ட போது, சீனா, துருக்கி, மலேசியா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு எதிராக பேசியது. பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக இந்த நாடுகள் கருத்து தெரிவித்தது. இதனால் தற்போது இந்தியா மலேசியா இடையே சண்டை மூளும் நிலை உருவாகி இருக்கிறது.

    தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி?தாஜ்மகாலுக்கு டபுள் ஓகே.. பட்டேல் சிலைக்கு நோ.. அதிபர் டிரம்ப் எடுத்த அதிரடி முடிவு.. ஏன் இப்படி?

    காஷ்மீர்தான் தொடக்கம்

    காஷ்மீர்தான் தொடக்கம்

    காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை நீக்கியதை மலேசியா விரும்பவில்லை. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன் ஐநா மாநாட்டில் மகதீர் முகமது பேசிய போது , ஐநா ஒப்பந்தத்தை இந்தியா மீறி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் இந்திய எல்லை மீறி நுழைந்து, ஆக்கிரமித்துள்ளது. அவர்களின் இந்த செயலுக்கு கண்டிப்பாக காரணம் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் செய்தது தவறுதான் என்று, இந்தியாவிற்கு எதிராக மலேசிய பிரதமர் மகாதீர் பேசி இருந்தார்.

    இதுதான் பிரச்சனை

    இதுதான் பிரச்சனை

    இதுதான் இரண்டு நாடுகளுக்கும் இடையில் பிரச்சனையாக உருவெடுத்தது. இதையடுத்து இந்தியாவின் வெளியுறவுத்துறை இதற்கு கடுமையாக பதில் அளித்தது. அதில், ஐநாவில் மலேசிய பிரதமர் பேசியதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவரின் பேச்சு உண்மைக்கு மாறானது. அவரின் பேச்சு எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று குறிப்பிட்டு இருந்தது. இரண்டு உறவில் இது விரிசலை உண்டாக்கியது.

    முழு சண்டை

    முழு சண்டை

    இதனால் இரண்டு நாட்டிற்கும் இடையில் பொருளாதார சண்டை ஏற்பட்டது. மலேசியாவிற்கு எதிராக இந்தியா ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியது. அதன் ஒரு கட்டமாக இந்தியா மலேசியாவிடம் இருந்து தாவர எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடிவு செய்தது . மலேசிய பொருட்களின் இறக்குமதிக்கு கூடுதல் வரி விதித்தது.

    என்ன பதிலடி

    என்ன பதிலடி

    இதற்கு மலேசியா கோபம் கொண்டு பதில் அளித்தது. அதில், இந்தியாவில் தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியா மதச்சார்பற்ற நாடு. அங்கு குடியுரிமை தொடர்பாக கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தத்தில், இஸ்லாமியர்கள் மட்டும் இந்தியக் குடிமக்களாவதிலிருந்து தடுக்கப்படுவது நியாயமல்ல. இந்தியா எங்கள் மீது தடை விதித்ததாலும் கூட,நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை மாற்ற மாட்டோம் என்று உறுதியாக கூறினார்.

    பெரிதாக வெடிக்கும்

    பெரிதாக வெடிக்கும்

    இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை பெரிதாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மலேசியாவின் பிரதமர் டாக்டர் மகாதீர் மொஹமத் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்து பிரதமர் பதவியில் இருந்து விலகினார். இது மலேசியாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மகாதீர் மொஹமத் சத்தியத்தை மீறிவிட்டார் என்று கூட்டணி கட்சியின் தலைவர் அன்வர் இப்ராஹிம் புகார் கொடுத்த சில மணி நேரங்களில் மகாதீர் மொஹமத் பதவி விலகி இருக்கிறார்.

    கடுமையான மோதல்

    கடுமையான மோதல்

    இது ஒரு வகையில் மத்திய பாஜக அரசுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது . மத்திய பாஜக அரசை இவர் கடுமையாக விமர்சித்து வந்தார். தற்போது இவர் பதவி விலகி உள்ளார். இது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை அதிக சந்தோசத்திற்கு உள்ளாக்கும் என்று கூறுகிறார்கள்.

    என்ன கேள்வி

    என்ன கேள்வி

    இதனால் அங்கு அன்வர் பிரதமர் ஆவாரா அல்லது அங்கு மீண்டும் தேர்தல் நடக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. மலேசியாவின் பிரதமராக அன்வர் பதவி ஏற்றால் இந்தியாவுடன் அவர் உறவு எப்படி இருக்கும். காஷ்மீர் விவாகரத்தில் அவர் நிலைப்பாடு எப்படி இருக்கும். இந்தியாவுடன் அவர் மீண்டும் இணைவாரா, சுமுகமாக போவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இரண்டு நாட்டு உறவில் இது பெரிய மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

    English summary
    Malaysia's Prime Minister Mahathir Mohamad's resignation may create new bond with India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X