டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதிலெல்லாம் தலையிட முடியாது.. நீங்களே பேசி தீர்த்துக்கோங்க.. பாக். முகத்தில் கரி பூசிய மாலத்தீவுகள்!

Google Oneindia Tamil News

Recommended Video

    காஷ்மீர் விஷயத்தை நீங்களே உட்கார்ந்து பேசிக்கோங்க - பிரான்ஸ் அதிபர்- வீடியோ

    டெல்லி: காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என மாலத்தீவுகள் பாகிஸ்தானின் முகத்தில் அடித்தாற் போல் கூறிவிட்டது.

    காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை மத்திய அரசு கடந்த 5-ஆம் தேதி நீக்கியது. இதனால் அதற்கான சிறப்பு அந்தஸ்தும் நீக்கப்பட்டது. இதையடுத்து காஷ்மீர் இரண்டாக பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

    இதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்த கவலையால் இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் எதிர்த்தது. இதன் எதிரொலியாக இந்தியாவை விசாரிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் நியாயம் கேட்க அழைத்து மூக்கு உடைப்பட்டுவிட்டது.

    எந்த நாடுகள்

    எந்த நாடுகள்

    இந்த நிலையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் முறையிட்டது. பாகிஸ்தானுடன் சேர்ந்து சீனாவும் ஒத்து ஊதியது. இதையடுத்து மற்ற நாடுகளையும் பாகிஸ்தான் அணுகியது. ஆனால் எந்த நாடுகளும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

    ஷா மமூத் குரேஷி

    ஷா மமூத் குரேஷி

    இதையடுத்து மாலத்தீவுகளின் வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்துக்கு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மமூத் குரேஷி வெள்ளிக்கிழமை மதியம் போன் செய்தார்.

    ஆதரவு தேவை

    ஆதரவு தேவை

    அப்போது காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நடவடிக்கை குறித்து ஷா பேசியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் தங்களின் ஆதரவு தேவை என்றும் கோரியுள்ளார்.

    இந்தியாவின் உள்விவகாரம்

    இந்தியாவின் உள்விவகாரம்

    ஆனால் மாலத்தீவுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித்தோ இந்தியாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நண்பர்கள். இருதரப்போடும் மாலத்தீவுகளுக்கும் நல்ல நட்புறவு உள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் ஆகும்.

    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    எனவே காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என மாலத்தீவுகள் தெரிவித்துவிட்டது. இதனால் பாகிஸ்தான் மீண்டும் ஏமாற்றம் அடைந்துவிட்டது.

    English summary
    Maldives backed India on Kashmir issue and said Pakistan that Kashmir is an internal issue of India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X