டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ராணுவ வீரர்களை, மோடி சந்தித்த மருத்துவமனை பற்றி வெளியான வதந்திகள்.. 'தீய நோக்கம்' என ராணுவம் கண்டனம்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி லடாக் யூனியன் பிரதேசத்தின் லே-பகுதிக்கு சென்று காயம் அடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியது தொடர்பாக வெளியான வதந்திகளுக்கு ராணுவத் தரப்பு கடும் மறுப்பு தெரிவித்துள்ளது.

Recommended Video

    PM Modi's Hospital Visit | India Army Statement | Oneindia Tamil

    முன்னறிவிப்பு ஏதுமின்றி நேற்று லடாக் யூனியன் பிரதேசத்தின் லே பகுதிக்கு நரேந்திர மோடி சென்றிருந்தார்.

    இந்திய சீன எல்லை நிலவரம் தொடர்பாக மூத்த ராணுவ அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் உடனிருந்தார்.

    "நாங்க இருக்கோம் மோடி" சப்போர்ட் தரும் ஜப்பான்.. நெருக்கடியில் சீனா.. இந்தியாவுக்கு கூடுகிறது ஆதரவு

    ராணுவ வீரர்களுடன் சந்திப்பு

    ராணுவ வீரர்களுடன் சந்திப்பு

    இதன்பிறகு அவர் அங்குள்ள பொது மருத்துவமனைக்கு சென்று கல்வான் தாக்குதலின்போது காயமடைந்த ராணுவ வீரர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். வீரர்கள் மத்தியில் அவர் மைக் பிடித்தபடி உரையாற்றிய வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்தன. உங்களை நினைத்து பாரதத்தாய் பெருமைபடுகிறாள், உங்களது தியாகம் தலைமுறைகளை கடந்தும் நினைவுகூரத் தக்கது என்று மோடி அப்போது பேசியிருந்தார்.

    ராணுவம் கண்டனம்

    ராணுவம் கண்டனம்

    இந்த நிலையில் பிரதமர் மோடி சென்றது பொதுமருத்துவமனையே கிடையாது என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பரப்பினர். இதற்கு ராணுவத் தரப்பு கடுமையான மறுப்புத் தெரிவித்ததுடன் கண்டனமும் பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது ராணுவத் தரப்பு.

    தீங்கிழைக்கும் உள்நோக்கம்

    தீங்கிழைக்கும் உள்நோக்கம்

    ராணுவம் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி விசிட் செய்த இடம் பற்றி, ஆதாரமற்ற மற்றும் தீங்கிழைக்கும் உள்நோக்கம் உடைய குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன. நமது துணிச்சல்மிக்க ராணுவ வீரர்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது தொடர்பாக சந்தேகங்கள் முன் வைக்கப்படுவது துரதிருஷ்டவசமானது.

    தரமான சிகிச்சை

    தரமான சிகிச்சை

    ராணுவ வீரர்களுக்கு உரிய வகையில் தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நரேந்திரமோடி உரையாற்றியது பொது மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு பகுதியாகும். இக்கட்டான சூழ்நிலைகளில் படுக்கை வசதியை அதிகரிப்பதற்காக இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி பொதுமருத்துவமனையில் குறிப்பிட்ட பகுதி தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாற்றப்பட வேண்டியது கட்டாயம். எனவேதான் இந்த இடத்தில் ராணுவ வீரர்கள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    உடல் நலம்

    கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பிறகு காயமடைந்த இந்த வீரர்கள் இந்த பகுதியில் வைத்துதான் சிகிச்சை அளிக்கப்படுகின்றனர். கொரோனா வைரஸ் பிரச்சினையிலிருந்து காப்பாற்றுவதற்காக தனிமைப்படுத்தப்பட்ட இடம் இது. ராணுவ தளபதி நரவனே மற்றும் ராணுவ கமாண்டர் இதே இடத்தில்தான் இதற்கு முன்பு ராணுவ வீரர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். இவ்வாறு ராணுவ செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

    English summary
    The Indian Army has clarified regarding the status of the facility that Prime Minister Narendra Modi visited in Leh on Friday. While some users on the social media had pointed out that the facility that the PM visited was not a hospital, the India Army has called these as malicious and unsubstantial accusations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X