டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாட்டின் பிரதமராக நாளை பதவியேற்கிறார் மோடி... மமதா, கெஜ்ரிவால் பங்கேற்பு!

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

லோக்சபா தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றது பாஜக. இதைத்தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளரான மோடி நாளை பதவி ஏற்கவுள்ளார். மோடியின் பதவியேற்பு விழா நாளை இரவு 7 மணிக்கு குடியசுத் தலைவர் மாளிகையில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழாவில் மமதா பங்கேற்க உள்ளார்.

கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம் கார்த்திக்கு சீட்டு கொடுக்காவிட்டால்.. நான் இதை செய்வேன்.. சோனியாவையே மிரட்டி சாதித்த ப.சிதம்பரம்

மமதா பங்கேற்பு

மமதா பங்கேற்பு

மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் இதனை ஏற்று மோடியின் பதவியேற்பு விழாவில் மமதா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியானது. இதனை மமதா பானர்ஜியும் உறுதி செய்துள்ளார்.

டெல்லி செல்கிறேன்

டெல்லி செல்கிறேன்

இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் , பதவியேற்பு விழா வழக்கமான நிகழ்வுதான், இதில் நான் பங்கேற்கிறேன் அதற்காக டெல்லி செல்லவுள்ளேன் என்றார்.

பாஜகவில் இணைந்தனர்

பாஜகவில் இணைந்தனர்

லோக்சபா தேர்தலுக்கு பின்னர் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இருவர் மற்றும் 50 கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி நேற்றுதான் பாஜகவில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கெஜ்ரிவால் பங்கேற்பு

கெஜ்ரிவால் பங்கேற்பு

இதேபோல் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பை ஏற்ற கெஜ்ரிவால் பதவியேற்பு விழாவில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

English summary
West Bengal CM Mamata Banerjee and Delhi Chief Minister Aravind Kejriwal will participate PM Oath ceremony. Modi taking oath as PM of India tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X