டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எதிர்க்கட்சி கூட்டணி தலைவர்.. ராகுல் காந்தியை விட மம்தா பானர்ஜிக்கு மக்கள் ஆதரவு: சர்வே

Google Oneindia Tamil News

டெல்லி: எதிர்க்கட்சிகளை வழிநடத்துவதற்கு சிறந்த தலைவர் யார் என்ற கருத்துக் கணிப்பில் ராகுல்காந்தி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பின்னுக்கு தள்ளி மம்தா பானர்ஜி முதல் இடம்பெற்றுள்ளதாக இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

உத்தரப் பிரதேசம் கோவா மணிப்பூர் உத்தராகண்ட் பஞ்சாப் ஆகிய ஐந்து மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் அடுத்து ஆட்சியை பிடிப்பது யார் ? என கருத்துகணிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

இதேபோல் அடுத்த முதல்வராக வரப்போவது யார்? ஒவ்வொரு கட்சிகளும் எத்தனை சீட்டுகளை பெறப் போகின்றன? என்பது குறித்து பல்வேறு கருத்துக்கணிப்புகளும் யூகங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதுவரை வந்த தகவல்களின் படி பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், மற்ற கட்சிகள் கடும் போட்டியை தரும் என கூறப்படுகிறது.

பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பிரதமர் மோடி தான் டாப்.. இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல் பஞ்சாப் தவிர 4 மாநிலங்களில் பிரதமர் மோடி தான் டாப்.. இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பில் தகவல்

இந்தியா டுடே கருத்துகணிப்பு

இந்தியா டுடே கருத்துகணிப்பு

இந்த நிலையில் இந்தியா டுடே நிறுவனம் மூட் ஆப் த நேஷன் 2022 அதாவது மக்களின் மனநிலை 2022 என்ற பெயரில் கருத்துக்கணிப்புகளை நடத்தியது. 5 மாநில தேர்தல்களை கருத்தில் கொண்டு நாடு தழுவிய கணக்கெடுப்பு மூலம் முக்கிய அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அளவிடுவதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

தலைவர்கள் குறித்து கேள்வி

தலைவர்கள் குறித்து கேள்வி

இந்தியா டுடே நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் 5 மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ள மாநிலங்களில் பஞ்சாப் தவிர மற்ற நான்கு மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடி அதிக செயல்திறன் காண மதிப்பீடுகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார் இதேபோல அடுத்த பிரதமர் வேட்பாளர் யார் எதிர்க்கட்சிகளை வழி நடத்துவது யார் எனவும் அந்த நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.

அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமராக யாரை தேர்வு செய்வீர்கள் என நடத்தப்பட்ட ஆய்வில் 53% பேர் பிரதமர் நரேந்திர மோடியை தங்கள் விருப்பத் தேர்வாக தேர்ந்தெடுத்துள்ளனர் அதற்கடுத்ததாக ராகுல்காந்தி 7 சதவீதத்துடன் 2-வது இடத்திலும், யோகி ஆதித்யநாத் 6 சதவீதம் ஆதரவுடன் 3-வது இடத்திலும், அமித்ஷா 4 சதவீத ஆதரவுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

சிறந்த எதிர்கட்சி தலைவர்

சிறந்த எதிர்கட்சி தலைவர்

இதேபோல எதிர்க்கட்சிகளை வழிநடத்துவதற்கு சிறந்த தலைவர் யார் எனவும் இந்தியா டுடே ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வின் அடிப்படையில் மேற்குவங்க முதல்வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி 17 சதவீத ஆதரவு பெற்று முதலிடம் பிடித்துள்ளார் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவர் ராகுல்காந்தி, அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை பின்னுக்குத் தள்ளியுள்ளார். ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் 16 சதவீத ஆதரவுடனும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி 11 சதவீத ஆதரவுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

English summary
According to a poll conducted by India Today, Mamata Banerjee has overtaken Rahul Gandhi and Arvind Kejriwal in the poll on who is the best leader to lead the opposition.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X