டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மமதா... மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான்… சர்ச்சையில் சிக்கிய மத்திய அமைச்சர்

Google Oneindia Tamil News

டெல்லி:மமதா பானர்ஜி.... மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான் என்று மத்திய அமைச்சர் ஒருவர் விமர்சித்துள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரை சிபிஐ அதிகாரிகள் கொண்ட குழு விசாரிக்க சென்றது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

Mamata banerjee is a demoness says union minister giriraj singh

மாநில அரசுக்கு தெரியப்படுத்தாமல், அனுமதி இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கொந்தளித்த அம் மாநில முதல்வர் மமதா பானர்ஜி தர்ணாவில் குதித்தார். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பிய இந்த விவகாரம்... எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக மமதான பானர்ஜியின் பக்கம் கொண்டு சென்றது

அவரின் தொகுதியில் உள்ள பாஜக அலுவலகம் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியது. மத்தியில் ஆளும் பாஜகவுக்கும், மமதா பானர்ஜிக்கும் கடும் மோதலாக இந்த விவகாரம் உருவெடுத்தது.

இந் நிலையில், மமதா பானர்ஜியை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், மேற்கு வங்கத்தை அழித்த சாத்தான் என்று கடுமையாக விமர்சித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கிரி ராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:மம்தாவை ஜான்சி ராணியுடன் ஒப்பிடுவது என்பது ஜான்சி ராணியை அவமதிப்பது போன்றதாகும். அவர் மேற்கு வங்கத்தை அழித்த சாத்தானாக இருக்கலாம். தம்மை எதிர்த்து பேசும் நபர்களை அழித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம்.

அவரிடம் ஜான்சி ராணியாகவோ, பத்மாவதியாகவோ மாறும் ஆற்றல் இல்லை. ரோஹிங்கியா ஊடுருவல் காரராகளை ஆதரித்து கொண்டு, இந்தியாவை பிரிப்பவராக மமதா பானர்ஜி இருக்கலாம். ஜான்சி ராணி நாட்டை காக்கப் போராடியவர். மமதாவே நாட்டை துண்டாட போராடுகிறார் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

English summary
Union minister Giriraj Singh alleged that West Bengal Chief Minister Mamata Banerjee was a demoness who had destroyed the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X