டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை பிரதமராக ஏற்க மறுக்கும் மம்தா.. பாக்.பிரதமரை பிரதமராக ஏற்பதில் பெருமைப்படுகிறார்.. மோடி பேச்சு

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் பிரதமராக பாகிஸ்தான் பிரதமரை ஏற்றுக்கொள்ளவதில் பெருமைப்படுகிறார் என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி மேற்கு வங்க மாநிலம் பன்குராவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

Mamata doesnt accept the PM of country as her PM. but she feels proud in accepting PM of Pakistan as PM , says modi

அப்போது பிரதமர் மோடி பேசுகையில், "தீதி(மம்தா) என்னை பிரதமராக ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாகிஸ்தான் பிரதமரை, பிரதமராக ஏற்றுக்கொள்வதில் பெருமைப்படுகிறார். இதேபோல் தேசத்தில் ஊடுருவியவர்களுக்காகவும், வெளிநாட்டு நடிகர்களுக்காகவும் மம்தா பானர்ஜி ஆதரவாக இருக்கிறார், ஆனால் நமது தேசத்தை காக்கும் ராணுவத்தினருக்கு ஆதரவாக இல்லை.

நாடு முழுவதும் மாநில அரசுகள் வேலை நிறுத்தப் போராட்டங்களை ஏற்கின்றன. ஆனால் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு ஏற்பதில்லை. மேற்கு வங்கத்துக்கு பனி புயல் வந்த போது நான் தீதிக்கு (மம்தாவுக்கு) மீண்டும், மீண்டும் அழைத்தேன். ஆனால் அவர் அதனை ஏற்கவில்லை. பிரதமருடன் இப்போது நாம் பேச வேண்டிய தருணம் என்பதை பற்றி அவர் கொஞ்சமும் யோசிக்கவில்லை.

இதனால் மத்திய அரசு, மேற்கு வங்க அதிகாரிகளுடன் பேசி தேவையான உதவிகளை செய்தது. ஆனால் மம்தா இதற்கான ஆலோசனை கூட்டத்தை கூட புறக்கணித்தார். இந்த மோடிக்கு மம்தாவின் கோபத்தை பற்றி கவலை இல்லை. ஏனெனில் 130 கோடி மக்கள் என்னை நேசிக்கிறார்கள்" இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

English summary
PM narendra modi says, Mamata Banerjee doesn't accept the PM of this country as her PM but she feels proud in accepting PM of Pakistan as PM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X