டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவர்.. இல்லைனா அவர்.. பிரதமர் பதவிக்கு தயாராகும் 2 பெண் தலைவர்கள்.. என்ன நடக்கும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    பிரதமர் பதவிக்கு தயாராகும் 2 பெண் தலைவர்கள்.. என்ன நடக்கும்?- வீடியோ

    டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு பின் இந்தியாவில் இரண்டு பெண் அரசியல் தலைவர்கள் மிக முக்கியமான சக்திகளாக மாறுவார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

    பொதுவாக இந்திய அரசியலில் ஆண் அரசியல் தலைவர்களை விட பெண் அரசியல் தலைவர்கள் அதிக சக்தி வாய்ந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். பெரிய பொறுப்பில் இல்லை என்றால் கூட, பெண் அரசியல் தலைவர்கள் அதிக கவனம் பெறுவார்கள்.

    இந்திரா காந்தி, ஜெயலலிதா, மமதா பானர்ஜி, மாயாவதி, கனிமொழி, பிரியங்கா காந்தி ஆகியோர் மிக முக்கியமான அரசியல் தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள். இந்த நிலையில்தான் தேசிய அரசியல் இனி வரும் காலங்களில் இரண்டு பெண் அரசியல் தலைவர்களை மையமாக வைத்து சுழல இருக்கிறது.

    அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்! அப்பாவை பற்றி பேசுவது இருக்கட்டும்.. முடிந்தால் இதை பேசுங்கள்.. மோடிக்கு பிரியங்கா சவால்!

    பிரதமர் குழப்பம்

    பிரதமர் குழப்பம்

    இதுவரை வந்த அரசியல் கணிப்புகள் படி, லோக்சபா தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று கூறுகிறார்கள். பாஜக கூட்டணி பெரும்பான்மை பெறாது. அதேபோல் காங்கிரஸ் கூட்டணியும் பெரும்பான்மை பெறாது. இதனால் காங்கிரஸ் கட்சியுடன் மாநில கட்சிகள் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது.

    யாருக்கு வாய்ப்பு

    யாருக்கு வாய்ப்பு

    ஆனால் மாநில கட்சிகள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க அனுமதிக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் மாநில தலைவர்கள் யாராவதுதான் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது. இந்த ரேஸில் இரண்டு தலைவர்கள்தான் முன்னிலை வகிக்கிறார்கள். அந்த இரண்டு பேரும் பெண் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இரண்டு பேர்

    இரண்டு பேர்

    உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிதான் தற்போது இந்த ரேஸில் முன்னிலையில் இருக்கிறார். இவர் உத்தர பிரதேசத்தில் அதிக இடங்களில் சமாஜ்வாதியுடன் சேர்ந்து வெற்றிபெறுவதன் மூலம் பிரதமராக முடியும் என்று நினைக்கிறார். இதை இவரே வெளிப்படையாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நிறைய ஆதரவு

    நிறைய ஆதரவு

    இவருக்கு அகிலேஷ் யாதவின் ஆதரவு இருக்கிறது. அதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் இவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கிறார்கள். இன்னும் சில வடமாநில கட்சிகளும் இவருக்கு வாய்ப்பளிக்கும். அப்படி நடக்கும்பட்சத்தில் இவர் தேசிய அரசியலில் மிக முக்கியமான நபராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

    இன்னொரு நபர்

    இன்னொரு நபர்

    இந்த ரேஸில் இருக்கும் இன்னொரு பெண் தலைவர் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. இவர் மாயாவதிக்கு அடுத்தபடியாக ரேஸில் இருக்கிறார். ஆனால் இவருக்கு மாயாவதியை விட நிறைய மாநில தலைவர்களின் ஆதரவு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

    யார் எல்லாம்

    யார் எல்லாம்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது. சமயங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் கூட, இவருக்கு ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் மமதா எம்.பி தேர்தலில் நின்று பிரதமராகவும் வாய்ப்புள்ளது.

    சூப்பர் வாய்ப்பு

    சூப்பர் வாய்ப்பு

    இதன் மூலம் பிரதமர் பதவியை பெண் தலைவர் ஒருவர் இந்திரா காந்திக்கு பின் அலங்கரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இவர்கள் இருவரை சுற்றித்தான் தேசிய அரசியல் இன்னும் சில வருடங்களுக்கு நகர போகிறது. ஆனால் பாஜக அல்லது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்றால், அது நடக்காமல் போக வாய்ப்புள்ளது.

    English summary
    Mamata or Mayawati: The National politics will depend on these 2 woman politicians after lok sabha elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X