டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜனநாயகத்தை கொன்றது மோடி அரசு.. காப்பாற்றி விட்டது சுப்ரீம் கோர்ட்.. மமதா மகிழ்ச்சி

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவினை வரவேற்பதாக மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ

    டெல்லி: கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன் ஆஜராக சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். ஜனநாயகத்தை மோடி அரசு கொன்றேவிட்டது, ஆனால், இப்போது, அதே ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவின் மூலம் காப்பாற்றியுள்ளது " என்று மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

    மேற்குவங்க விவகாரம் கடந்த சில தினங்களாக பற்றி எரிந்து வருகிறது. இது தொடர்பாக சிபிஐ பிரமாணப் பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது.

    அதில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மூத்த காவல் அதிகாரிகளுக்கு எதிராக ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த மோசடி விவகாரத்தில் மூத்த அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு இருக்கிறது என அந்த பிரமாணப் பத்திரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    கொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது.. கட்டாய வாக்குமூலம் வாங்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடிகொல்கத்தா கமிஷனரை கைது செய்யக் கூடாது.. கட்டாய வாக்குமூலம் வாங்கக் கூடாது- சுப்ரீம் கோர்ட் அதிரடி

    மமதா வரவேற்பு

    மமதா வரவேற்பு

    இந்நிலையில், இது சம்பந்தமான வழக்கினை சுப்ரீம் கோர்ட் விசாரித்தது. அப்போது, கொல்கத்தா காவல் ஆணையர் சிபிஐ முன் ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவினை மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் சொன்னதாவது:

    நாங்களா குற்றவாளிகள்?

    நாங்களா குற்றவாளிகள்?

    சிபிஐக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று நாங்கள் எப்போது சொன்னோம்? அப்படி நாங்கள் சொன்னதே கிடையாது. சிட் பண்ட் நிதி முறைகேட்டின் முக்கியக் குற்றவாளியை நாங்கள்தான் கைது செய்தோம். குற்றவாளிகளை நாங்கள் கைது செய்தபோது, எப்படி நாங்கள் குற்றவாளிகளாக இருக்க முடியும்?

    அரசியல் சாசனம்

    அரசியல் சாசனம்

    அதனால் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இதுவாகும். திரிணாமூல் காங்கிரஸ் மட்டும் தனியாக போராடவில்லை, ஒட்டு மொத்த தேசமும் ஜனநாயக நெறிமுறைகளைக் காக்க போராடியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு மூலம் அரசியல் சாசனச் சட்டம் காப்பாற்றப்பட்டுள்ளது.

    ஜனநாயகம்

    ஜனநாயகம்

    அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை கொன்றதுதான் மோடி அரசு. ஆனால், இப்போது, அதே ஜனநாயகத்தை சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவின் மூலம் காப்பாற்றியுள்ளது. " என்றார்.

    English summary
    Mamta Banerjee welcomes the sc order and also says the Supreme Court has saved democracy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X