டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிரதமரை தீர்மானிக்கும் சக்திகளாக மாறிய மம்தா, மாயாவதி.. காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்கும் மம்தா பானர்ஜி, அகிலேஷ், மாயாவதி- வீடியோ

    டெல்லி: பிரதமர் யார் என்பதை தீர்மானிப்பதற்காக வரும் மே 21-ஆம் தேதி நடத்தப்படும் காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்பதை புறக்கணிக்க மம்தா பானர்ஜி, அகிலேஷ், மாயாவதி ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.

    நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு பதிவு 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்டங்கள் முடிந்த நிலையில் அதன் வாக்கு எண்ணிக்கை வரும் மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பாஜகவை பொருத்தவரையில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் மோடியே அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் காங்கிரஸ் கூட்டணியை பொருத்தமட்டில் இன்னும் அனைத்து கட்சிகளும் சேர்ந்து எந்த முடிவையும் எடுக்கவில்லை.

    ஆல்வார் பலாத்கார வழக்கு.. ரொம்பவும் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க... மோடி மீது மாயாவதி தாக்கு ஆல்வார் பலாத்கார வழக்கு.. ரொம்பவும் முதலைக் கண்ணீர் வடிக்காதீங்க... மோடி மீது மாயாவதி தாக்கு

    ஆலோசனை

    ஆலோசனை

    இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் வரும் மே 21-ஆம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.

    புறக்கணிக்க

    புறக்கணிக்க

    இந்த கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆந்திர முதல்வர் சந்திரசேகரராவ் செய்து வருகிறார். இந்த நிலையில் இந்த கூட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உ.பி. முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

    தவிர்ப்பு

    தவிர்ப்பு

    தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்காத நிலையில் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக மாயாவதியும், மம்தாவும் விளங்குவார்கள் என தெரிகிறது. இதனால் அவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதை தவிர்க்கிறார்கள் என கூறப்படுகிறது.

    தெலுங்கானா முதல்வர்

    தெலுங்கானா முதல்வர்

    மேலும் திமுக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க முடிவு செய்துள்ளன. ஆனால் இதற்கு ஆரம்பத்திலிருந்து மம்தாவும், மாயாவதியும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 3ஆவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதால் அது எந்த அளவுக்கு கைக் கொடுக்கும் என தெரியவில்லை.

    English summary
    Mamta and Mayawati wants to boycott Congress meeting which is going to be held on May 21 in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X