டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மேற்கு வங்கத்தில் தீதியே ஆட்சியை தக்க வைப்பார்..பாஜக 2வது பெரிய கட்சியாக உருவெடுக்கும்.. ஏபிபி சர்வே!

Google Oneindia Tamil News

டெல்லி: மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணமூல் கட்சியே ஆட்சியை தக்க வைக்கும் என ஏபிபி சிஎன்எக்ஸ் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா என தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

சட்டசபை தேர்தல்: மநீம- 5; அமமுக 3 இடங்களில் வெல்லும்- டைம்ஸ் நவ் சர்வே சட்டசபை தேர்தல்: மநீம- 5; அமமுக 3 இடங்களில் வெல்லும்- டைம்ஸ் நவ் சர்வே

தீதியோ பெட்ரோல் டீசல் விலையுயர்வு, சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பேரணி நடத்தினார். இந்த நிலையில் வரும் தேர்தலில் தாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என பாஜக கூறி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு

காங்கிரஸ் கட்சிக்கு

இந்த நிலையில் மொத்தமுள்ள 294 சட்டசபைக்கு 148 பெரும்பான்மை பலம் ஆகும். கடந்த ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திரிணமூலம் காங்கிரஸ் கட்சி 211 இடங்களில் வென்றது. இந்த நிலையில் ஏபிபி சிஎன்எக்ஸ் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வேயில் 154 முதல் 164 இடங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்கிறது.

இரண்டாவது மிகப் பெரிய கட்சி

இரண்டாவது மிகப் பெரிய கட்சி

அது போல் பாஜகவோ 102 முதல் 112 இடங்களில் வென்று மாநிலத்தில் இரண்டாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுக்கும். இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டணியும் இணைந்து 22 முதல் 30 இடங்களை பெறும். தென் மேற்கு வங்கத்தில்தான் 119 தொகுதிகள் உள்ளன. இந்த மிகப் பெரிய பகுதியில் 60 முதல் 66 இடங்கள் வரை திரிணமூல் வெல்லும். பாஜகவோ 51 முதல் 57 இடங்கள் வரை வெல்லும். இடதுசாரி- காங்கிரஸ் கூட்டணி 1 முதல் 3 இடங்கள் வரை வெல்லும் என்கிறது சர்வே.

கிழக்கு வங்கத்தில் 84 தொகுதிகள்

கிழக்கு வங்கத்தில் 84 தொகுதிகள்


அது போல் தென் கிழக்கு வங்கத்தில் 84 தொகுதிகள் உள்ளன. இதில் 54 முதல் 60 தொகுதிகள் வரை திரிணமூல் கட்சி ஜெயிக்கும். பாஜகவோ 7 முதல் 13 இடங்களிலும் இடதுசாரிகளும் காங்கிரஸ் கூட்டமியும் 14 முதல் 20 இடங்களிலும் வெல்லும். அது போல் வடக்கு வங்கத்தில் மொத்தமுள்ள 56 இடங்களில் 12 முதல் 18 இடங்களில் திரிணமூல் காங்கிரஸும், 29 முதல் 35 இடங்களில் பாஜகவும் இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி 5 முதல் 9 இடங்களிலும் வெல்லும்.

35 சட்டசபைத் தொகுதிகள்

35 சட்டசபைத் தொகுதிகள்

அது போல் கிரேட்டர் கொல்கத்தாவில் 35 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு 21 முதல் 27 இடங்களிலும் பாஜக 8 முதல் 14 இடங்களிலும் வெல்லும். இடது சாரிகளும்-காங்கிரஸ் கூட்டணியும் இந்த பகுதியில் ஒரு தொகுதியிலாவது வெல்வது என்பது சிரமம் என்கிறது கருத்துக் கணிப்பு முடிவுகள்.

திரிணமூல் காங்கிரஸ்

திரிணமூல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். 41.53% வாக்குகள் பெறும்- ஏபிபி-சி.என்.எக்ஸ் 2-வது சர்வே கூறுகிறது. அதாவது முதல் சர்வேயைவிட திரிணாமுல் காங்.க்கு கூடுதலாக 0.44% வாக்குகள் கிடைக்கும். அது போல் பாஜகவுக்கு 34% வாக்குகள் கிடைக்கும் என ஏபிபி-சி.என்.எக்ஸ் 2-வது சர்வே கூறுகிறது. ஏபிபி-சி.என்.எக்ஸ் முதல் சர்வேயைவிட பாஜகவுக்கு 3% வாக்குகள் சரிவு ஏற்படும். இடதுசாரி-காங். அணிக்கு 19% வாக்குகள் கிடைக்கும் என 2-வது சர்வே கூறுகிறது. முதல் சர்வேயைவிட இந்த அணிக்கு 2% வாக்குகள் கூடுதலாக கிடைக்கும்.

English summary
Mamta Banerjee Government will be formed again in West Bengal, says ABP CNX survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X