மனைவிகளை ஸ்வாப் செய்யும் உல்லாச விருந்து.. தம்பியுடன் ஒரு நைட்.. கட்டாயப்படுத்தும் கணவர் மீது புகார்
டெல்லி: டெல்லியில் குருகிராமில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பார்ட்டிகளுக்கு கட்டாயப்படுத்தி அழைத்து செல்வதாக கணவர் மீது அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார். அது போல் கணவரின் சகோதரனும் உறவு கொள்ளுமாறும் கட்டாயப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
விபச்சாரங்கள் நடைபெறுவதை போல் தற்போது பெரிய பெரிய பார்ட்டிகளில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பகீர் நிகழ்வுகளும் நடக்கின்றன. சென்னை, பெங்களூர், டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநகரங்களில் இது போன்ற கலாச்சாரம் கொடி கட்டி பறக்கிறது.
இதற்காக வாட்ஸ் ஆப் குரூப் உருவாக்கி, அதில் தங்களுக்கு வேண்டிய நண்பரின் மனைவியையோ அல்லது கணவரையோ தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் பெரிய ஹோட்டல்களில் பார்ட்டியின் போது கார்களின் சாவிகள் ஒன்றாக கலெக்ட் செய்யப்படும்.
120 பெண்கள், 400 உல்லாச வீடியோக்கள், 1900 ஆபாச படங்கள்! கைதான நாகர்கோவில் காசியின் பகீர் லீலைகள்

குலுக்கி போட்டு தேர்வு
இதையடுத்து அதை ஒருவர் குலுக்கி போடுவார், ஒவ்வொவருவராக வந்து ஒவ்வொரு சாவியை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கும் நபர் அந்த காருக்கு சொந்தக்காரருடைய மனைவியுடன் அன்று இரவு முழுவதும் இருக்கலாம். இது போல் பெண்களும் சில இடங்களில் இது போன்றதொரு வாட்ஸ் ஆப் குரூப்களை உருவாக்கி தங்கள் கணவன்மார்களை மாற்றிக் கொள்கிறார்கள். இவை பெரும்பாலும் இரு தரப்பினரின் சம்மதத்தின் பேரிலேயே நடக்கும்.

குருகிராம்
ஆனால் குருகிராமில் கணவர் தனது மனைவியை இது போன்று மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பார்ட்டிகளுக்கு வருமாறு கட்டாயப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொழிலதிபரை புகார் கொடுத்த பெண் இரண்டாவதாக திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் குருகிராமில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த பெண் தனது கணவர் மீதும் அவரது சகோதரன் மீதும் ஒரு புகாரை கொடுத்துள்ளார்.

பார்ட்டி
அந்த புகாரில், எனது கணவர், மனைவிகளை மாற்றும் பார்ட்டிகளுக்கு அடிக்கடி செல்வார். அவ்வாறு செல்லும் போது என் விருப்பம் இல்லாமல் என்னையும் அழைத்துச் செல்வார். அந்த இடத்திற்கெல்லாம் நான் வரமாட்டேன் என சொன்னால் எனது கணவர் என்னை துன்புறுத்தி, பாலியல் ரீதியில் தொல்லை கொடுப்பார். கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதியே நான் குருகிராமில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முயற்சித்தேன்.

கணவர் கைது
ஆனால் செல்லும் வழியில் என் கணவரால் ஏவிவிடப்பட்ட அடியாட்கள் என்னை வழிமறித்து புகார் கொடுத்தால் கொன்றுவிடுவதாக மிரட்டினர். அது போல் எனது மைத்துனர், அதாவது என் கணவரின் சகோதரருடனும் உறவு வைத்துக் கொள்ள வற்புறுத்துகிறார் என தனது புகாரில் அந்த பெண் தெரிவித்திருந்தார். இதையடுத்து உத்தரப்பிரதேச போலீஸார் அந்த பெண்ணின் கணவரையும் அவரது சகோதரனையும் கைது செய்துள்ளனர்.