டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

300 அடியிலிருந்து விழுந்திச்சு.. போயே போச்சுனு பாத்தா.. பயப்புள்ள விழுந்ததையும் வீடியோ எடுத்த ஐபோன்

Google Oneindia Tamil News

டெல்லி: பிரேசிலியாவைச் சேர்ந்த எர்னாஸ்டோ காலியோட்டோ விமானத்தில் பயணம் செய்த போது ஒரு ஐபோன், விமானத்தில் இருந்து தவறி விழுந்தது. எனினும் போனுக்கு ஒன்றும் ஆகவில்லை, அது விழுந்த காட்சிகளை அந்த போன் வீடியோவாக பதிவு செய்துள்ளது.

பிரேசிலியாவைச் சேர்ந்தவர் எர்னாஸ்டோ காலியோட்டோ. இவர் தயாரிப்பாளர் மற்றும் சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் ரியோ டி ரெனிரோவுக்கு ஒரு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது கேபோ ஃபிரியோ கடற்கரை மேல் பறந்து கொண்டிருந்த போது ஒரு சிறிய ஜன்னல் மூலம் இயற்கையை தனது ஐபோன் 6 எஸ் மூலம் படம் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அதிக காற்று வீசியதால் காலியோட்டோ தனது ஐபோனை கீழே விட்டுவிட்டார்.

அப்புறம் என்னப்பா மார்கழி பிறந்துடுச்சு.. 'அதை' வாங்கிடுவோமா? தெறிக்க விடும் மீம்ஸ்கள்!அப்புறம் என்னப்பா மார்கழி பிறந்துடுச்சு.. 'அதை' வாங்கிடுவோமா? தெறிக்க விடும் மீம்ஸ்கள்!

போச்சு

போச்சு

முதலில் தமது ஐபோன் இனி கிடைக்காது , போயே போச்சு என நினைத்தார். பின்னர் ஜிபிஎஸ் மூலம் அந்த போனை டிராக் செய்ய முயற்சித்த போது அது கடற்கரைக்கு அருகே விழுந்திருந்தது.

300 மீட்டர்

300 மீட்டர்

உடனே அந்த இடத்திற்கு சென்ற காலியோட்டோ தனது போனை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். அதாவது 984 அடி உயரம், 300 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்தும் தமது ஐபோனுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாமல் உடையாமல் இருந்ததை கண்டு மகிழ்ந்தார்.

கேமரா

கேமரா

எனினும் அந்த போனின் ஸ்கிரீனில் சிறிய அளவிலான சேதம் மட்டுமே இருந்தது. போனை ஆராய்ந்த போது போனில் இருந்த இம் பில்ட் கேமரா மூலம் அது விழும்போது வீடியோவாக எடுத்திருந்ததையும் கண்டார். சுமார் 15 வினாடிகள் கொண்ட வீடியோவை தனது போன் பதிவு செய்துள்ளது.

பேட்டரிகள்

பேட்டரிகள்

தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் போன் விழுந்திருந்தது. மேலும் அந்த போன் விழும் போது 16 சதவீதம் மட்டுமே சார்ஜ் இருந்தது. ஆனால் தற்போது முழு சார்ஜ் இருக்கிறது. இதனால் சூரியன் மூலம் இதன் பேட்டரிகள் சார்ஜ் செய்யப்பட்டு விட்டது என்றார்.

English summary
Man drops his iPhone from the plane. It records the entire fall.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X