டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

8000 புத்தகங்கள்.. வீட்டிலேயே குட்டி லைப்ரரி வைத்திருக்கும் சௌமிக்.. குவியும் திருமண புரொபோசல்கள்!

தான் சேகரித்து வைத்துள்ள புத்தகங்களின் புகைப்படத்தை வெளியிட்டவருக்கு திருமண அழைப்புகள் குவியத் தொடங்கியுள்ளன.

Google Oneindia Tamil News

டெல்லி: பல்வேறு புத்தகங்களை சேகரித்து, வீட்டிலேயே குட்டி நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளவருக்கு திருமண புரொபோசல்கள் குவியத் தொடங்கியுள்ளன.

புத்தக வாசிப்பு தான் ஒருவரின் அறிவாற்றலை பெருக்கக்கூடியது. அதுமட்டுமல்ல புத்தகங்கள் நமது கற்பனை வளத்தைப் பெருக்குகின்றன. எனவே தான் புத்தக வாசிப்பு பழக்கத்தை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு நாம் கற்றுத்தருகிறோம்.

Man gets marriage proposals after he shares photos of his books collection

அந்த வகையில் சௌமிக் என்பவர் தான் சேகரித்த புத்தகங்களை கொண்டு தனது வீட்டில் குட்டி நூலகம் ஒன்றை உருவாக்கி வைத்திருக்கிறார். அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து, "என்னைப் பற்றி தெரியாதவர்களுக்காக இதை சொல்கிறேன்.. நூலகத்தில் தான் நான் வாழ்கிறேன்", என குறிப்பிட்டிருந்தார். அதோடு தனது வீட்டில் 8000 புத்தகங்கள் வரை இருக்கிறது என்றும் சௌமிக் தெரிவித்திருந்தார்.

இதைப்பார்த்த பெண்கள் பலர், "இப்படிப்பட்ட ஒரு அறிவாளியை தான் தேடிக்கொண்டிருந்தேன். எப்போது திருமணம் செய்துகொள்ளலாம்", என திருமண புரோபோஸ் செய்ய தொடங்கிவிட்டனர். இதனால் சௌமிக் செம குஷியாகிவிட்டார்.

Man gets marriage proposals after he shares photos of his books collection

மேலும் புத்தகப்பிரியர்கள் பலரும் எப்படி இத்தனை புத்தகங்களை சேமித்து வைத்துள்ளீர்கள், எப்படி தூசு படியாமல் சுத்தம் செய்வீர்கள் என சௌமிக்கிடம் டிப்ஸ் கேட்கத் தொடங்கி விட்டனர். அவரும் சளைக்காமல் அவற்றிற்கு பதிலளித்து வருகிறார். 'தான் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வெறும் 70 சதவீதம் தான்.. இன்னமும் நிறைய மீதமிருக்கின்றன' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Man gets marriage proposals after he shares photos of his books collection

ஆனாலும் 8000 புத்தகங்களை எல்லாம் சேர்த்து வைத்திருப்பது உண்மையிலேயே ஆச்சர்யம் தரக்கூடிய விசயம்தான். எல்லாம் செல்போன்மயமாகி விட்ட உலகில், நிச்சயம் சௌமிக்கின் புத்தக வாசிப்பு காதலை, தேடலை பாராட்டியே ஆக வேண்டும்.

“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..!“காக்கை குருவி எங்கள் ஜாதி”.. ஒரு வயதிலேயே இப்படி ஒரு நல்ல குணமா.. சபாஷ் குட்டிப்பையா..!

English summary
Book lovers flooded with marriage proposals to a man who shared photos of his library-cum-home on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X