டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கோகோ கோலா, தம்ஸ் அப்புக்கு தடை கேட்ட நபர்- ரூ.5 லட்சம் பைன் சுப்ரீம் கோர்ட்

கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் கூல் டிரிங்க்ஸ் விற்பனையை தடை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதிகள் வழக்கு போட்ட நபருக்கு ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர

Google Oneindia Tamil News

டெல்லி : கோகோ கோலா மற்றும் தம்ஸ் அப் குளிர்பானங்களில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக கூறி அவற்றின் விற்பனையை தடை செய்யக் கோரி உமேத்சிங் பி சாவ்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அதனை தள்ளுபடி செய்ததோடு வழக்கு போட்ட நபருக்கு ரூ. 5 லட்சத்தை அபராதமாக விதித்துள்ளனர்.

மக்களை பாதிக்கும் சில விசயங்களுக்கு நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்து இயல்பானதுதான். நீதிமன்றத்தில் அந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும். அப்படித்தான் உமேத்சிங் பி சாவ்தா என்பவர் உச்சநீதிமன்றத்தில் சமீபத்தில் பொதுநல மனுவை ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனு இரண்டு முக்கியமான குளிர்பான பிராண்டுகளுக்கு எதிரானது.

Man PIL against Coca Cola,Thums Up - SC Fines man Rs 5 Lakh

கோகோ கோலா, தம்ஸ் அப் ஆகிய குளிர்பானங்களில் மக்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாகவும் அவற்றின் விற்பனை தடை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை சுப்ரீப்கோர்ட்டில் நீதிபதிகள் டி.ஒய் சந்திர சூட், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஒரு சமூக ஆர்வலர் என்று கூறுகிறார். அது ஏன் குறிப்பிட்ட இந்த இரண்டு பிராண்ட் குளிர்பானங்களை மட்டும் தடை செய்ய வேண்டும் என்று கோருகின்றார் என்று தெரியவில்லை என்று கேள்வி எழுப்பினர். மனுதாரருக்கு இந்த விசயத்தில் தொழில் நுட்ப அறிவு எதுவும் இல்லாமல் மனுவை தாக்கல் செய்துள்ளார் என்று கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதோடு மனுதாரர் உமேத்சிங் பி சாவ்தாவிற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

 சர்ச், மசூதி, தேவஸ்தான விவகாரம்.. சிவக்குமார் குடும்பத்தை.. மொத்தமாக இழுக்க மெகா கட்சி செம திட்டம்? சர்ச், மசூதி, தேவஸ்தான விவகாரம்.. சிவக்குமார் குடும்பத்தை.. மொத்தமாக இழுக்க மெகா கட்சி செம திட்டம்?

நீதிபதிகள் மேலும் தங்கள் உத்தரவில், மனுதாரர் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்படும் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும்,
ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தனது கருத்தை அவரால் உறுதிபடுத்த முடியவில்லை என்றும் தெரிவித்தனர். இதுபோன்ற வழக்கை தொடர்ந்த மனுதாரர் வழக்கு செலவாக இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தனர். ஒருமாதத்திற்குள் 5 லட்சம் ரூபாயை உச்சநீதிமன்றத்தில் டெபாசிட் வேண்டும். அந்த பணத்தை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பதிவு சங்கத்திற்கு வழங்குமாறு சாவ்தாவிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சாவ்தாவிற்கு நேரம் சரியில்லைதான் போல குளிர்பானத்திற்கு தடைகேட்டு பொது நல வழக்கு போடப்போய் கடைசியில் 5 லட்சம் அபராதம் கட்டவேண்டியதாகிவிட்டது.

English summary
A Man filed a Public Interest Litigation seeking a ban on Coca Cola and Thums Up citing health concerns. The Supreme Court, while imposing the fine Rs 5 Lakh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X