டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தன் உயிரை பணயம் வைத்து இந்த நபர் செய்த காரியத்தை பாருங்க!.. இவர்தாங்க உண்மையான ஹீரோ!

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரு காட்டில் நரியின் கால் வேறு விலங்கிற்கு வைக்கப்பட்ட பொரியில் மாட்டிக் கொண்டதை அடுத்து அவ்வழியாக வந்த நபர் தனது உயிரை பணயம் வைத்து அந்த நரியை காப்பாற்றும் காட்சிகள் வைரலாகி வருகின்றன.

சிறிய எறும்பானாலும் சரி பெரிய யானையாக இருந்தாலும் சரி உயிர் என்றால் அது விலை மதிக்க முடியாதது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. தெரிந்தே ஒரு விலங்கிற்கு கெடுதலை நினைக்கக் கூடாது என்பதுதான் மனிதம்.

அது போல் ஒரு விலங்கு ஆபத்தில் இருக்கும் போது அதை காக்க வேண்டும். ஆனால் திண்டுக்கல்லில் ஒரு பெண் தீக்குளித்து தற்கொலை செய்யும் காட்சிகளை அவ்வழியே போவோர் , வருவோர் பார்க்கிறார்களே தவிர, அந்த பெண்ணை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை.

வாத்தி கமிங்.. தன்னோட ஹோம்ஒர்க்கை பத்திரமா வச்சிருந்த வாத்தியாரிடம் வாங்கி ரிலீஸ் செய்த எலான் மஸ்க்!வாத்தி கமிங்.. தன்னோட ஹோம்ஒர்க்கை பத்திரமா வச்சிருந்த வாத்தியாரிடம் வாங்கி ரிலீஸ் செய்த எலான் மஸ்க்!

ஆபத்து

ஆபத்து

இது ஒருபுறமிருக்க ஒரு குட்டி குரங்கு ஆபத்தில் சிக்கியதை அறிந்த நாய் அதை காப்பாற்றியது. அது போல் நீச்சல் குளத்தில் விழுந்த வெட்டுக்கிளியையும் அது மூழ்காதவாறு வாயில் கவ்வி ஒரு நாய் காப்பாற்றியது. அது போல் ஒரு காட்டுவிலங்கை ஒருவர் ஆபத்திலிருந்து காப்பாற்றியுள்ளார். அதுவும் தனது உயிரை பணயம் வைத்து....

காப்பாற்றிய சம்பவம்

காப்பாற்றிய சம்பவம்

ஒரு காட்டில் ஏதோ விலங்கிற்கு வைக்கப்பட்ட பொரியில் அவ்வழியாக வந்த நரியின் கால்கள் சிக்கி, அது தாங்க முடியாத வலியால் ஊளையிட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து அந்த நரியை காப்பாற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது.

வாய் பகுதி

வாய் பகுதி

ஒரு கம்பை கொண்டு அதன் வாய் பகுதியை மூடிக் கொண்டு இன்னொரு கையால் அந்த பொரியை விலக்குகிறார். எனினும் வலி தாளமுடியாமல் அந்த நரி அங்கும் இங்கும் சுற்றுகிறது. எனினும் அவர் ஒரு வழியாக அந்த பொரியை எடுத்துவிடுகிறார். அடுத்த கணமே இவர் அப்பகுதியிலிருந்து ஓட்டம் பிடிக்கிறார். நரியும் ஓட்டம் பிடிக்கிறது.

வீடியோ பதிவு

வீடியோ பதிவு

இந்த வீடியோவை அந்த நபரே எடுத்துள்ளார். தரையில் போனை வைத்து விட்டு கேமராவை ஆன் செய்து எடுத்துள்ளார். அந்த நபருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தெரியப்படுத்துவதற்காக அந்த சம்பவத்தை அவர் அப்படியே ரெக்கார்டு செய்துள்ளார்.

குவியும் பாராட்டுகள்

குவியும் பாராட்டுகள்

இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுனந்தா நந்தா ட்விட்டரில் பதிவிட்ட சில மணி நேரங்களில் வைரலானது. அந்த நபர்தான் உண்மையான ஹீரோ என இன்டர்நெட்டில் பாராட்டு மழை பொழிகிறது. அத்துடன் மனிதநேயத்துடன் இந்த நபர் செயல்பட்டுள்ளார் என்றும் தனது உயிரை பணயம் வைத்து ஒரு காட்டு விலங்கின் உயிரை மீட்டுள்ளார் என்றும் பாராட்டுகள் குவிகின்றன.

English summary
A video goes viral in Social media that a man saves wolf by putting his life in danger. He is a Real hero, says Internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X