டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

2 மணி நேரம் லேட்.. இந்தியில் பேசிய மோடி.. மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

Google Oneindia Tamil News

Recommended Video

    Man vs Wild Modi | மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் இதெல்லாம் கவனிச்சீங்களா?

    டெல்லி: இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி இணையம் முழுக்க பெரிய வைரலாகி உள்ளது.

    இந்திய பிரதமர் மோடி, டிஸ்கவரி சேனலில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரிய வைரலாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி நேற்று இரவு டிஸ்கவரி சேனலில் 9 மணிக்கு ஒளிபரப்பானது.

    இதில் பேர் கிறில்ஸ் உடன் மோடி பேசியதும், அவர் நடந்து கொண்ட விதமும் ஒரு பக்கம் வரவேற்பை பெற்று இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்கள் இதை மீம் போட்டு காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

    என்ன கவனம்

    என்ன கவனம்

    நேற்று ஒளிரப்பான இந்த நிகழ்ச்சி கடந்த பிப்ரவரியில் புல்வாமா தாக்குதல் நடந்த சமயத்தில் பதிவு செய்யப்பட்டது. ஆம் அங்கு புல்வாமா தாக்குதல் நடந்த போது இங்கு பிரதமர் மோடி ஷூட்டிங்கில் பிசியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் முழுதாக முடிந்த பின்தான் அவர் அங்கிருந்து கிளம்பி புல்வாமா தாக்குதல் குறித்து ஆலோசித்தார்.

    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    இந்த நிகழ்ச்சியில் மக்கள் கவனிக்க தவறிய சில விஷயங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சி முழுக்க மோடி ஹிந்தியில் மட்டுமே பேசினார். ஆனால் பேர் கிறில்ஸ் ஹிந்தியில் நமஸ்தே என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் பேச தெரியாத நபர். அவர் ஆங்கிலத்தில் பேச, இவர் இந்தியில் பதில் சொல்ல.. நேற்று நிகழ்ச்சியே ஒரே ஆரவாரமாக இருந்தது.

    இதற்கு முன்

    இதற்கு முன்

    பொதுவாக பேர் கிறில்ஸ் தன்னுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருந்தினர்களை மோசமான விஷயங்கள் உட்கொள்ள வைப்பார். அல்லது உயிரினங்களை கொல்ல வைப்பார். முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், டென்னிஸ் வீரர் பெடரர் கூட பழைய மாமிசங்களை சாப்பிட்டு இருக்கிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அப்படி எந்த ரிஸ்க்கும் எடுக்கவில்லை.

    என்ன பேசவேண்டும்

    என்ன பேசவேண்டும்

    நேற்று நிகழ்ச்சியில் பிரதமர் உடன் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள் கேமராவுக்கு பின் இருந்தனர். அதேபோல் மோடி என்ன பேச வேண்டும் என்பதற்கான வசனகர்த்தாக்களும் உடன் இருந்தனர். இதெல்லாம் போக மோடிக்கு நிகழ்ச்சியின் போது உணவு சமைத்து தரவும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

     எதுவும் நடக்கவில்லை

    எதுவும் நடக்கவில்லை

    பொதுவாக பிரபலங்களுடன் ஷோ நடத்தினாலும் பேர் கிறில்ஸ் அவர்களை நிறைய சாகசங்களை செய்ய வைப்பார். ஆனால் நேற்று எப்படி எல்லாம் எதுவும் நடக்கவில்லை. மோடி மலை ஏறவில்லை, எங்கும் குதித்து ஓடவில்லை, படகு உருவாக்கி, நெருப்பு உருவாக்கி சாதனைகளை செய்யவில்லை. பேர் கிறில்ஸ் மோடி இருவரும் ஈவ்னிங் வாக் சென்றது போல நிகழ்ச்சி பாதுகாப்போடு உருவாக்கப்பட்டு இருந்தது.

    விலங்குகள்

    விலங்குகள்

    அதேபோல் மோடி கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் பெரிய விலங்குகள் எதுவும் கண்ணில் படவில்லை. மூன்று குரங்குகள் மட்டுமே கண்ணில் பட்டது. அதேபோல் பழைய யானை வீடியோக்கள் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. பின் சில மான் வீடியோக்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, நான் விலங்குகள் வந்தால் கொலை செய்ய மாட்டேன். எனக்கு கொலை மீது நம்பிக்கை இல்லை. கடவுள் எனக்கு உதவி செய்வார். அதேபோல் நான் 18 வருடங்களில் இப்போதுதான் லீவ் எடுக்கிறேன், என்று நிறைய விஷயங்களை குறிப்பிட்டார்.

    லேட்டாக வந்தார்

    லேட்டாக வந்தார்

    இந்த நிகழ்ச்சியில் பேர் கிறில்ஸ் மோடி இருவரும் 5 கிமீ நடந்து இருக்கிறார்கள். இந்த வீடியோ எடுப்பதற்கான ஷூட்டிங்கிற்கு 2 மணி நேரம் தாமதமாக மோடி வந்து இருக்கிறார். அதேபோல் வெளிநாட்டில் இவரின் பேச்சு ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. மோடிக்கு உள்ளே இருந்த குழந்தை தனமான விஷயங்கள் பல இந்த ஷோவில் வெளிப்பட்டது கொஞ்சம் ரசிக்கும் படியாக இருந்தது.

    என்ன வைரல்

    என்ன வைரல்

    எத்தனை சிக்கல்கள், விமர்சனங்கள் இருந்தாலும் மோடி ஆதரவாளர்கள், வட இந்தியர்கள் மத்தியில் நேற்று இந்த ஷோ ஹிட் அடித்து இருக்கிறது. அதேபோல் அந்த ஷோவிற்கும் ஒரே நாளில் டிஆர்பி இந்தியாவில் கூடி இருக்கிறது. ஆனால்.. ஆனால்.. கண்டிப்பாக இது எப்போதும் விறுவிறுப்பாக செல்லும் அந்த மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சி என்று சொல்ல முடியாது.

    English summary
    Man Vs Wild, featuring Narendra Modi becomes viral after telecasted yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X