டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனைவிகளை தவிக்க விட்டு ஓடிய 45 இந்தியர்களின் பாஸ்போர்ட் ரத்து.. மத்திய அரசு அதிரடி

Google Oneindia Tamil News

டெல்லி: மனைவி மற்றும் குழந்தைகளை தவிக்க விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய இந்தியர்கள் 45 பேரின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களில் கல்யாணம் முடித்து, தங்கள் மனைவிமார்களை கைவிட்டவர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விசாரணை மத்திய பெண்கள் நல அமைச்சகம் சார்பாக நடத்தப்பட்டது.

Maneka Gandhi says 45 passports of NRIs cancelled

நோடல் ஏஜென்ஸி என்ற அமைப்புடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில்,மொத்தம் 45 பேர் இப்படி மனைவிமார்களை கைவிட்டு அந்தந்த நாடுகளில் வாழ்ந்து வருவது தெரியவந்தது.

 கொஞ்சமாவது அறிவோடு பேசுங்கள்.. பிரதமர் மோடி அதிரடி தாக்கு கொஞ்சமாவது அறிவோடு பேசுங்கள்.. பிரதமர் மோடி அதிரடி தாக்கு

இது சம்பந்தமாக அத்துறை அமைச்சர் மேனகா காந்தி சொல்லும்போது, "மனைவி, குழந்தைகளை தவிக்கவிட்டு வெளிநாடு செல்லும் இந்தியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலங்களவையில் புதிய மசோதா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் இந்த சட்டம் இன்னும் அமலாக்கம் செய்யப்படவில்லை என்பது கவலை அளிக்கிறது. எனினும் இதில் நடத்தப்பட்ட விசாரணையில் மொத்தம் 45 பேர் இதுவரை கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். இதையடுத்து அவர்களின் பாஸ்போர்ட்களும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளன" என்றார்.

English summary
Maneka Gandhi announces 45 NRI's Passports cancelled for abandoning their wives
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X