டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முஸ்லீம்கள் எனக்கு ஓட்டு போட்டாக வேண்டும்.. போட்டால்தான்.. பிரச்சாரத்தில் டீல் பேசிய மேனகா காந்தி

சுல்தான்பூர் பிரச்சாரத்தில் மேனகா காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: நம்ம ஊர்ல எப்படி எச்.ராஜாவோ அதுமாதிரி மேனகா காந்தியை இந்துத்துவா பிடிப்புக்கு உதாரணமாக சொல்லலாம்! வாக்கு சேகரிக்க போன இடத்தில் டீல் பேசிவிட்டு வந்திருக்கிறார் மேனகா!

சஞ்சய்காந்தியின் மறைவுக்கு பின் காந்தி குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் எழுந்தன. அதனால் கருத்து வேறுபாடுகளால் சஞ்சய் மனைவியான மேனகா காந்தி பாஜகவில் சேர்ந்தார். இப்போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராகவும் உள்ளார்.

இப்போது உத்தரபிரதேசம் சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் அக்கட்சி சார்பாக போட்டியிடவும் உள்ளார். இதற்காக சுல்தான்பூரில் பிரசாரத்தில் பேசியபோது, "மக்கள் என் மீது வைத்துள்ள ஆதரவு, அபிமானத்தினால் நான் வெற்றி பெறுகிறேன்.

ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம் ராகுலை போல் தென்னிந்தியாவில் போட்டியிடாதது ஏன் .. பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு விளக்கம்

கொடுக்கல்-வாங்கல்

கொடுக்கல்-வாங்கல்

ஆனால் என் வெற்றி முஸ்லிம்கள் ஆதரவு இல்லாமல் நிறைவேறினால் நன்றாக இருக்காது. முஸ்லிம் ஒருவர் என்னிடம் காரியம் ஆகவேண்டும் என்று வந்தால், நான் எப்படி அவருக்கு உதவ முடியும்? எனக்கு அது விஷயமா? எல்லாமே ஒரு கொடுக்கல் வாங்கல்தான்.

காந்தி வாரிசு இல்லை

காந்தி வாரிசு இல்லை

அப்படி எதிர்பார்க்காம இருப்பதற்கு நாம ஒன்னும் மகாத்மா காந்தி வாரிசு கிடையாது. நான் ஏற்கெனவே ஜெயித்து விட்டேன். இருந்தாலும் நான் உங்களுக்கு தேவைப்படுவேன். அடித்தளம் அமைக்க உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இது. முஸ்லிம்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் கோரிக்கைகளை நான் புறக்கணிக்க வேண்டியிருக்கும்" என்று டீல் பேசியுள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

கிவ் அண்ட் டேக் பாலிசி போல மேனகா பேசிய வீடியோதான் இன்று வைரலாகி வருகிறது. கூடவே ஏகப்பட்ட சர்ச்சையையும் சேர்த்தே இழுத்து கொண்டு வருகிறது.

மிரட்டல்

மிரட்டல்

இஸ்லாமியர்கள் என்றாலே ஆகாதாம்.. ஆனால் அவர்களின் ஓட்டுக்கள் மட்டும் பாஜகவுக்கு வேண்டுமாம்.. இதில் மிரட்டல் வேறு! மேனகாவின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

English summary
Maneka Gandhi threats muslims to vote for her in MP Election or risk losing job opportunities in future
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X